பிறக்கவிருக்கும் சித்திரை புது வருடம்! இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அமோகமாக இருக்கப்போகுதாம்



தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கப்போகுது.

அந்தவகையில் 12 ராசியில் எந்த ராசியினருக்கு அமோகமான பலன்கள் இருக்கப்போகுது என்று பார்ப்போம். 

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இது உங்களுக்கு சாதகமானதே.சூரியன் புதன் குரு 5ம் இடத்தில் ராகுவோடு இணைகிறது.

இந்த கோள்களின் சேர்க்கை என்ன சொல்கிறதென்றால் நீங்கள் நினைக்கும் வேலை ,உங்கள் தொழில் முன்னேற்றம் என சுபமான காரியங்கள் உங்களுக்கு நடக்கும்.

நீங்கள் நினைத்தது நடக்கும் மற்றும் ,நினைத்ததை நடாத்துவதற்கும் சிறப்பான மாதம் ஏப்ரல் மாதம் ஆகும்.

உங்கள் இலக்கை அடைவீர்கள்.

திருமண தடை நீங்கும்.

உதவி நிறைய வகையில் கிடைக்கும்.

நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.

பதவி அதிகாரம் உயர்வு கிடைக்கும்.

   குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பரிசு பொருட்கள் கிடைக்கும். பெற்றோர் ஆதரவு இருக்கும்.

மன அமைதி கிடைக்கும்.  

மகர ராசி 

சனி பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.

சுக்கிரன் 5ம் இடத்திற்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கிறது.

சூரியன் உச்சம் மற்றும் புதன் உச்சம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வாழ்க்கை சுவாரசியமாக மாறும்.

பண வரவு அதிகமாக இருக்கும்.

குடும்பம் மூலமோ நட்பு மூலமோ பண ஆதரவு கிடைக்கும்.

தள்ளிப்போன விடயங்கள் நடக்கும்.

2ல் சனி இருப்பதனால் குடும்ப குழப்பம் மற்றும் ,குடும்ப ஆதரவு சரி சமமாக இருக்கும்.

குடும்ப உறுப்பினருக்கு ஏதோ ஒரு வகையில் கஷ்டம், சுமை ஏற்படும்.

சூரியன் உச்சத்தில் இருப்பதனால் வேலை சுமை இருக்கும்.

மாணவர்கள் தெளிவாக இருப்பார்கள்.  

ரிஷப ராசி

ஏப்ரல் மாதம் 6ம் திகதி சுக்கிரன் ரிஷப ராசிக்கு வருகிறார் .

2ல் செவ்வாய் 11 ல் குரு இருக்கிறார்.

சனி உங்களுக்கு சாதகமாக இருக்கிறார்.

புதன் 12 ம் வீட்டில் இருப்பதால் புதிதாக வேலைக்கு முயற்சி செய்தால் உடனே அமையாமல் நேரம் தள்ளி அமையும்.

இந்த மாதம் முழுதும் செலவு அதிகமாக இருக்கும்.

ஏப்ரல் 1ம் திகதி நீங்கள் யாருக்காவது தானம் பண்ணுவது சிறப்பு.

இதனால் தோஷம் குறைந்து செலவுகள் நல்லதாக மாறும்.

திருமண கருத்துகள் சரியாக பொருந்தாமல் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

முடிந்தளவு அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.

குழப்பங்கள் இருக்கும்.ஆகவே பொருமையாக இருந்தால் சிறப்பு தரும்.

சிம்ம ராசி

ஏப்ரல் மாதம் சிறப்பு ஏனெனில் சூரியன் உச்சம் அடைகிறது.

குரு சூரியன் அங்கேயே புதனும் இணைகிறார்.

11ம் இடத்தில செவ்வாயும் 10 ல் சுக்கிரனும் இருக்கிறார்.

சனி ஆட்சி பெற்று இருக்கிறார்.

எல்லா கோள்களும் சாதகமாக இருக்கிறது.

ஏப்ரல் 14ம் திகதியில் இருந்து பலன்கள் சிறப்பாக இருக்கிறது.

நினைத்ததை நிறைவேற்றலாம்.

ஆரோக்கியம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

திருமணம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

மாணவர்களுக்கும் முயற்சி நல்ல பலனை தரும்.

நினைத்ததை நடத்தி முடிக்கும் மாதம் இது .சிம்ம ராசிக்கு இது சாதகமாகவே இருக்கிறது.

துலாம் ராசி

குருவுடைய பார்வை விழுகிறது .

சூர்யன் ஆட்சி பெறுகிறார்.

சுக்கிரன் 8 ம் இடத்தில இருக்கிறார்.

புதன் 7 ல் இருக்கிறார்.

முயற்சிகள் 70 வீதம் சாதகமாக அமையும்.

குருவின் பார்வை இருப்பதனால் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேலை மற்றும் வர்த்தகத்தில் வாய்ப்புகள் இருக்கும்.

திருமண வாழ்க்கை குழப்பமாக இருக்கும்.

குழப்பம் இருந்தாலும் தெளிவான சிந்தனையை குடுக்கும்.

ஓரொரு நாள் ஓரொரு விதமாக இருக்கும்.

மாணவர்களுக்கு சூரியன் மற்றும் குருவின் பார்வை சாதகமாக இருக்கும்.

வெளியூர் சென்று படிப்பது சிறப்பாக இருக்கும்.

உங்களது அனுபவம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தருமே ஒழிய உங்கள் அதிர்ஷ்டம் பலன் தராது.

ஆகவே சிந்தித்து செயற்படுவது சிறப்பு.

ஆரம்பத்தில் தடங்கலாக இருந்தாலும் சாதகமாக இருக்கும்.

தடங்கலுக்கு பின் வெற்றி அடைவீர்கள்.

விருச்சிக ராசி

விருச்சி ராசிக்கு செவ்வாய் 8 ம் வீட்டில் சனி 4 யிலும் குரு 6 யிலும் இருக்கிறார்கள்.

இவை கடன், எதிர்ப்பு, முயற்சி தடைபட்டு போதல் போன்றவையை குறிக்கும்.

எதையுமே தயங்கி தான் செய்வீர்கள்

.சூழ்நிலை சாதகமாக இருக்காது.

ஆனால் சுக்கிரன் உங்களுக்கு சாதகமா இருக்கிறார்.

கணவன் மனைவி பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.

வர்த்தக முயற்சிகள் சற்று தாமதமாகும்.

6ம் இடத்தில் குரு ,சனி ,செவ்வாய் ,புதன் இருக்கிறார்கள்.

வேலைத்தளத்தில் தேவையில்லாத விடயங்களில் தலை போடாமல் இருப்பது சிறப்பு.

பண விடயங்களில் எச்சரிகையாக இருப்பது நல்லது.

அனைவரையும் அனுசரித்து போக வேண்டும்.

மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.

ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் தாண்டி வந்துவிட்டால் அது வெற்றி தரும்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.