தல வந்தால்… சும்மா அதிர்ருதுல்ல…. – தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் டிக்கெட் விற்று தீர்ந்தது…!


சென்னையைத் தவிர ஐபிஎல்லில் தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 போட்டி

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

விற்று தீர்ந்த டிக்கெட்டுக்கள்

இந்நிலையில், ஐபிஎல் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனைகள் ஒவ்வொரு மைதானங்களிலும் தொடங்கியுள்ளது.

பெங்களூரிலும், மும்பையிலும் டிக்கெட் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

ஆனால், சென்னையில் மட்டும் இன்றும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கவில்லை. ஏனென்றால், 3வது ஒருநாள் போட்டி நடந்து வருவதால் டிக்கெட் விற்பனை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளன. இதற்காக 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில் ரசிகர்கள் ஆன்லைன் மூலம் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி குவித்துவிட்டனர்.

அதேபோல், பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் அனைத்தும் வீற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. கொல்கத்தாவிலும் கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.

சென்னை மட்டும் தான் தற்போது பாக்கியாக உள்ளது.

ipl-2023-chennai-team-players-ms-dhoni

தோனியின் கடைசி ஆட்டம்

இதற்கு காரணம் என்னவென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் தல தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக கூட இருக்கலாம். அதனால், ரசிகர்கள் தோனியை கடைசியாக ஒரு முறை மைதானத்தில் பார்க்க வேண்டும் என்ற வெறியில் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

ஆனால், சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தோனி திரும்ப வந்துள்ளார். அப்போ சென்னையில் டிக்கெட் விற்பனை எப்படி இருக்கும் என்று பார்த்துக்கோங்க… டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.