அருணாச்சல்லில் ஜி20 மாநாடு: சீனா புறக்கணிப்பு?| China Skips Confidential G20 Meet In Arunachal: Sources

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஆராய்ச்சி தொழில்முனைவு தொடர்பான ஜி20 மாநாட்டை சீனா புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு தலைமை ஏற்றுள்ளது. இந்த அமைப்பு தொடர்பான மாநாடுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதனடிப்படையில், அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் நடந்த இந்த கூட்டம் குறித்து செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

latest tamil news

ஆனால், இந்த கூட்டத்தை சீனா புறக்கணித்து உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அருணாச்சல்லில் இந்த கூட்டம் நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சீனா இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த கூட்டத்திற்கு பங்கேற்க இடா நகர் விமான நிலையம் வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு உள்ளூர் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு, வெளிநாட்டு பிரதிநிதிகள் அருணாச்சல் சட்டசபை மற்றும் புத்த மடத்தையும் பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.