17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி


அயர்லாந்து எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 202 ஓட்டங்கள் குவித்தது.

ஓவர்கள் குறைப்பு

சாட்டோகிராமில் நடந்து வரும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் துடுப்பாடியது.

மழை காரணமாக 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் மற்றும் ரோனி தலுக்தார் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினர்.

17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி | Ban Scored 202 In 17 Overs 

மிரட்டல் கூட்டணி

இவர்களின் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 124 ஓட்டங்கள் சேர்த்தது. 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்த ரோனி ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷகிப் வாணவேடிக்கை காட்டினார். தாஸ் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

202 ஓட்டங்கள் குவிப்பு

வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது.

ஷகிப் 38 (24) ஓட்டங்களும், டௌஹித் 24 (13) ஓட்டங்களும் விளாசினர். அயர்லாந்தின் ஒயிட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி | Ban Scored 202 In 17 Overs @Twitter  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.