இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த ஜனவரி இறுதியில் இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். இதன்பின்னர், … Read more

மதிய உணவு இடைவேளை: ஆஸ்திரேலியா அணியை திணறடித்த அஸ்வின், ஷமி…!

ஆமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி … Read more

தென் கொரியாவில் கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு ஆயிரம் நாய்கள் கொடூர கொலை

சியோல், தென் கொரியாவின் வடமேற்கே அமைந்த கியாங்கி மாகாணத்தில் யாங்பியாங் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என வீடு, வீடாக சென்று தேடி உள்ளார். அப்படி சென்றதில் வீடு ஒன்றில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வை பார்த்து அதிர்ந்து போனார். இதுபற்றி கேர் என்ற விலங்குகள் உரிமை குழு ஆர்வலர்களுக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் வீட்டின் பின்புறத்தில் கூண்டுகள், சாக்கு பைகள் மற்றும் ரப்பர் … Read more

#JUSTIN : அரசு பேருந்து குறித்த புகார்களுக்கு.. இனி ஒரு கால் செய்தால் போதும்.. அமைச்சர் அறிவிப்பு.! 

அரசு பேருந்துகளின் நிறை, குறைகள் குறித்த புகார்களை கட்டணம் இல்லாமல் பதிவு செய்ய புதிய இணையதளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பொதுவாக அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் மரியாதை குறைவாகவும், அதிலும் விலை இல்லா பயணம் செய்யும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் அநாகரிகமாகவும் நடந்து கொள்வது காலம் காலமாக அரங்கேறி வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை வைத்த போதும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றால் அது … Read more

ரீல்ஸ் மோகம் – பறிபோன இளம்பெண் உயிர்..!!

புனே அருகே உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மாலை 5 மணி அளவில் அயன் ஷேக், சையத் ஜாவித் ஷேக் என்ற இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக சாலையில் பைக் ஓட்டி சாகச செயல்களில் ஈடுபட்டனர். மக்கள் வந்து செல்லும் என்ற சாலை என்று எண்ணாமல் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசத்தில் அவர்கள் ஈடுபட்ட நிலையில், அந்த சாலையில் பெரோஸ் பதான் என்ற 31 பெண் ஸ்கூட்டியில் வந்துள்ளார். அப்போது ரீல்ஸ் வீடியோ செய்து … Read more

நாடாளுமன்றத்துக்கு பாடகி போல உடை, விக், அலங்காரத்துடன் வந்த எம்.பி, குவியும் பாராட்டு; காரணம் என்ன?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல அமைப்புகளும் நிதி திரட்டுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வித்தியாசமான முறையில் அதற்காக நிதி திரட்டி இருக்கிறார். புற்றுநோய் சூசன் லே, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், லிபரல் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இவர் நாடாளுமன்றத்திற்கு, பாடகி டினா டர்னர் (Tina Turner) போல உடையணிந்து வந்தார். அமெரிக்காவில் பிறந்த சுவிஸ் பாடகியான டினா டர்னர், நடனம், நடிப்பு எனப் பன்முக திறமை கொண்டவர். இவரைப் போல உடையணிந்து, விக் வைத்து சூசன் … Read more

சட்ட விரோத வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கணேசன்

சென்னை: சட்ட விரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார். தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரியக் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசுகையில், “தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் … Read more

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா நாளை டெல்லியில் உண்ணாவிரதம்: 18 கட்சிகள் பங்கேற்பதாக தகவல்

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை, கவிதாவுக்கு சம்மன் அனுப்பியது. இன்று (மார்ச் 9) ஆஜராக அவர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த கவிதா, பெண் ஒருவரிடம் விசாரணை நடத்துவதாக … Read more

இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா மோதல்களுக்கு வாய்ப்பு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ஓர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ”கடந்த 2020-ல் இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் என்பது பல பத்தாண்டுகளில் ஏற்பட்டிராத ஒரு நிகழ்வு. இது இரு நாடுகளுக்கு இடையே கடினமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவும் … Read more