சல்மான் கானுடன் கைகோர்த்த ராம்சரண்

மும்பை, மார்ச் 9: பாலிவுட் படத்துக்காக சல்மான் கானுடன் இணைந்துள்ளார் ராம்சரண். தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். ஆர்ஆர்ஆர் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இவர் இந்தியில் சன்ஜீர் என்ற …

டெல்லி அமைச்சரவையில் மணீஷ் சிசோடியா, சத்தியேந்தர் ஜெயின் ராஜினாமா செய்த நிலையில், சவுரவ் பரத்வாஜ், அதிசி பதவியேற்பு

டெல்லி: மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்தர் ஜெயின் ராஜினாமா செய்த நிலையில், டெல்லி அமைச்சரவையில் சவுரவ் பரத்வாஜ் மற்றும் அதிசி ஆகியோர் இன்று ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதிசி கல்வித்துறை அமைச்சராகவும், சவுரவ் பரத்வாஜ் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

மகளிர் தின வாழ்த்து – விமர்சனத்திற்கு உள்ளான ஆண்ட்ரியாவின் புகைப்படம்

நடிகை, பின்னணி பாடகி என இரண்டு பாதைகளில் பயணித்து வரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் மகளிர் தினம் என்பதால் நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார் ஆண்ட்ரியா. அந்த பதிவில், பெண்ணாக இருப்பதற்கு என்றென்றும் … Read more

ஒடிசா: சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்து – 12 மணி நேரமாக தொடரும் தீயணைப்பு பணி

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கும் இந்த சந்தை வளாகத்தில், நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவியதால், அருகில் இருந்த கட்டடங்களும் தீப்பற்றி எரியத்தொடங்கின. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 160 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை … Read more

கடைசி டெஸ்ட்: முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 149-2

அகமதாபாத், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லபுஸ்சேன் … Read more

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு அச்சம்

வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் கீழான இந்தியா, கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாமல் ராணுவ படை உதவியுடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என தெரிவித்து உள்ளது. காஷ்மீரில் வன்முறை பரவி … Read more

தமிழகத்தில் வெளிநாட்டு சிகரெட் லைட்டர் விற்றல் நடவடிக்கை – அமைச்சர் விடுத்த அறிவிப்பு!

சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது, பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ. கணேசன் அறிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்/வாரியத் தலைவர் சி. வெ. கணேசன் தலைமையில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டவிரோதமாக விற்கப்படும் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்..!! கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது ..!!

மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடை காலத்தில் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ், லக்கானி, மேலாண்மை இயக்குநர் ரா.மணிவண்ணன், அனைத்து இயக்குநர்கள், தொடர்புடைய தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒருவர் … Read more