மாற்று மதம் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை

சென்னை: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேசிய விவகாரத்தில், பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2021ம் அண்டு இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக சமூக … Read more

ஓமலூரில் பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கு விற்பனை

சேலம்: ஓமலூர் வெங்காய மண்டிகளுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது விலை குறைந்து கிலோ எட்டு ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார பகுதிகளில் வெங்காய மண்டிகள் உள்ளன. இங்குள்ள வெங்காய மண்டிகள் மற்றும் சேலம் வெங்காய மார்க்கெட்டிற்கு தற்போது பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து இந்தியா முழுவதும் … Read more

சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் வாகனம், இஸ்திரி பெட்டி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பொருட்களை முதல்வர் வழங்கினார். பெரியார் நகர் மருத்துவமனையை மேம்படுத்த அடிக்கல் நாட்டுகிறார். அவ்வை நகரில் புதிய பூங்கா அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

அடுக்குமாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த வங்கி, அலுவலகம், கடைகளில் வேதியியல் பொருட்கள் வெடித்த விபத்தில் 17 பேர் பலி..!!

டாக்கா: வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள பழைய டாக்கா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. இந்நிலையில் நேற்று மாலை கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்தனர். அங்கிருந்த இடிபாடுகளை அவர்கள் அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து … Read more

68 வயதில் தண்ணீர் பயம் நீங்கி நீச்சல் பழகிய அனுபம் கெர்

கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அவ்வப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் செலெக்ட்டிவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது தனது 68வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் அனுபவம் கெர் கடந்த சில பிறந்த நாட்களில் ஒவ்வொரு விஷயமாக சவால் விட்டு அதை நிறைவேற்றிக் காட்டி வருகிறார். கடந்த வருடம் மேலாடை இன்றி தனது கட்டுமஸ்தான உடலை ரசிகர்களிடம் காட்டி அவர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த வருடத்தில் தண்ணீர் மீது தனக்கு இருந்த … Read more

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கடற்கரை அருகே விபத்து – அதிர்ஷ்டவசமாக 3 வீரர்களும் உயிர் தப்பினர்…!

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகு ரக ஹெலிகாப்டர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக ஹெலிகாப்டரை விமானி அவசர அவசரமாக மும்பை கடற்கரை அருகே தரையிறக்கினார். அவசர அவசரமாக தரையிறங்கியபோது ஹெலிகாப்டர் கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடற்படை மீட்புக்குழுவினர் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, … Read more

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: இந்திய வீரர் ஜடேஜா பெயர் பரிந்துரை

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக், காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் … Read more

அமெரிக்கா: மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கருக்கு பதவி

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முதன்முறையாக இந்திய-அமெரிக்கரான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியன் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செனட் நீதிமன்ற கமிட்டி வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக அருண் சுப்ரமணியனுக்கு பணி வழங்கப்படுகிறது. அவர், பொதுமக்களின் வழக்கில் ஒவ்வொரு விசயத்திலும் நேரடியாக விசாரணை மேற்கொள்வார். மத்திய நீதிமன்ற அளவிலான பணியில் அவர் ஈடுபடுவார். இந்த நீதிமன்ற அமர்வில் சேவையாற்ற … Read more

எந்தவொரு பரீட்சைக்கும் தாய்மொழியைப் பயன்படுத்தும் உரிமை நிலைத்திருக்க வேண்டும்

நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் … Read more