முதலமைச்சருக்கு ஒட்டகத்தை பரிசாக கொடுத்த தொண்டர்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர் ஒருவர் ஒட்டகத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சருக்கு புத்தகங்கள், ஆடுகள் என பரிசுகொருட்களை வழங்கினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஜாகிர்ஷா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2 வயதாகும் ஒட்டகத்தைப் பரிசாக அளித்தார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உயிர் பொருள்களைப் பரிசாக வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். முதலில் … Read more

`வகுப்புத் தோழன் ஆனந்துக்கு…' இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உடல் நலம், கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார். இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் பில் கேட்ஸை நேரில் சந்தித்தனர். அந்த வகையில் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ராவும் பில் கேட்ஸை  நேரில் சந்தித்துள்ளார். பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி, சக்தி காந்ததாஸ் Good … Read more

மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ் விளக்கம்

சென்னை: ”நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி என்ற வதந்தியை நம்ப வேண்டாம்; பாஜக உடன் கூட்டணி தொடர்பாக பேசவில்லை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். சேலத்தில் பாமக சார்பில் ‘மனம் விட்டுப் பேச வாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் … Read more

கேம்ப்ரிட்ஜ் பல்கலை. விரிவுரைக்காக ராகுல் காந்தி புதிய தோற்றம்: இந்திய ஒற்றுமை யாத்திரைக்குப் பின் முடித்திருத்தம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் முதல்முறையாக, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் விரிவுரையாற்ற செல்கிறார் ராகுல் காந்தி. இதற்காக அவர் தலைமுடி, தாடியை திருத்தம் செய்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை லண்டன் சென்றார். இந்த பயணத்தில், ராகுலின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மாணவர்களுக்கு மட்டும் எடுக்க இருக்கும் விரிவுரையும் அடங்கும். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் (ஜேபிஎஸ்) கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் காந்தி, … Read more

ஊழியர்கள் பணிநீக்கம் எதிரொலி? – உலக அளவில் ட்விட்டர் சேவை முடங்கியதாக பயனர்கள் புகார்

சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் ட்விட்டர் தள சேவைகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். #Twitterdown என பயனர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 200 ஊழியர்களை மஸ்க், பணி நீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். அப்போது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் ட்விட்டர் தளத்தில் மேற்கொண்டு வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் … Read more

கொரோனா – பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்: வழக்கு தள்ளுபடி!

கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது. மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்பப் பெற்று, 9ஆம் வகுப்பு … Read more

இந்து மதத்தை காக்க 3 ஆயிரம் கோயில்கள்; ஆந்திர அரசு அறிவிப்பு.!

ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாநிலத்தில் கோவில்கள் கட்டும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் வழிகாட்டுதலின் பேரில், இந்து மதத்தைப் பாதுகாக்கவும், பிரச்சாரம் செய்யவும் இந்த முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் கோட்டு சத்தியநாராயணா கூறினார். “இந்து நம்பிக்கையை பாரிய அளவில் பாதுகாக்கவும் பரப்பவும், நலிந்த பிரிவினரின் உள்ளாட்சிகளில் இந்து கோவில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது” … Read more

Kavin:தனுஷை தொடர்ந்து கார்த்தி செய்த காரியம்: சந்தோஷத்தில் திக்குமுக்காடும் கவின்.!

நடிகர் கார்த்தி ‘டாடா’ பட நாயகன் கவினை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டி தள்ளியுள்ளார். தனுஷ்திரைத்துறையை பொறுத்தமட்டில் ஒரு நடிகரின் படத்தை இன்னொரு நடிகர் பாராட்டுவது என்பது அரிதான ஒன்று. ஆனால் தற்போது இந்த நிலை மாறி நல்ல படங்களை அனைவரும் பாராட்ட ஆரம்பித்துள்ளனர். சமீப காலமாக தான் பார்த்து ரசிக்கும் படங்களின் படக்குழுவினரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டி வந்தார் ரஜினி. இதே பாணியில் நடிகர் தனுஷும் ‘டாடா’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். கவின்இந்நிலையில் தற்போது … Read more

ஒரு நாளில் மூன்று நிறத்தில் மாறும் சிவலிங்கம்! மர்மங்கள் நிறைந்த கோயில்

பொதுவாக, நாம் கோவில்களில் கண்டு வழிபடும் சிவலிங்கங்கள் கருப்பு நிறத்திலோ அல்லது மட்டும் உள்ள பனியால் ஆன வெள்ளை நிறத்திலோ கண்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு சிவதலத்தில் உள்ள லிங்கம் ஒரு நாளில் மூன்று நிறத்தில் மாறிக்கொண்டே இருக்குமாம். அப்படிப்பட்ட ஒரு மர்மங்கள் நிறைந்த கோயிலை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம். தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டடப்பட்டுள்ள நிலையில், இங்கே இருக்கும் சிவனை மக்கள் அச்சலேஷ்வர் மகாதேவப் என்று கூறுகின்றனர். … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறிய தமிழ்நாட்டு வீரர் அஸ்வின்-..

டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியில் ஸ்பின்னரான தமிழ்நாட்டைச் சேர்ந்த  அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான … Read more