திருச்சியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருச்சி திருவெறும்பூர் அருகே அய்யம்பட்டியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர். தேவையான நிபந்தனை விதித்து நாவல்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

மனப்பாறை அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

திருச்சி: திருச்சி மனப்பாறை அருகே கே.உடயாபட்டியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை கைது செய்துள்ளனர். ஆடு மீது பைக் மோதிய தகராறில் ராஜ்குமார் என்பவரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் பிரிட்டோவை கைது செய்தனர். ஜான் பிரிட்டோவிடமிருந்து அரசு உரிமம் உள்ள துப்பாக்கியும் இரண்டு தோட்டக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  

இயக்குனரிடம் வருத்தப்பட்ட ஷீலா

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ள படம், ‘குடிமகான்’. பிரகாஷ்.என் இயக்கியுள்ளார். இவர் ‘குட்டி தாதா’ என்ற குறும்படத்தை இயக்கியவர். விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், …

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 0.2% ஆக குறைத்து அறிவித்தது சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ்..!!

டெல்லி: சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 0.2 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது. 2022 – 23ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் முன்பு கணித்திருந்தது. தற்போதைய உலக பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாகவே இருக்கும். அதே நேரத்தில் 2023 – 24ம் ஆண்டில் இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.5 … Read more

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: 7 பேருக்கு மரண தண்டனை| Kanpur terror conspiracy: 7 ‘IS operatives’ get death penalty

லக்னோ: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தியாவில் தடை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், 2017 மார்ச் 8 ல் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், முகமது பைசல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணை அடிப்படையில், கவுஸ் முகமது கான், … Read more

"இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு" – இந்திய வானிலை மையம் கணிப்பு

புதுடெல்லி, கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு … Read more

ஆஸ்திரேலியாவின் சுழலில் சுருண்ட இந்தியா – 109 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தூர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுக்மன் கில் களமிறங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரங்களில் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் … Read more

கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம்: அமெரிக்கா உளவு அமைப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் 2 ஆண்டுகளாக நீடித்தது சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக … Read more

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ,கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கு அமைவாக ,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலைகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபாய் 92 சதமாகவும் கொள்வனவு  விலை 357 ரூபாய் 68 சதமாக அமைந்திருந்தது.. கடந்த மாதம் 24 ஆம் திகதி டொலர் … Read more