கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

  கிரீஸில், பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் ஏதென்ஸிலிருந்து, 350 பயணிகளுடன் தெசலோனிக்கி நகரம் நோக்கி சென்ற ரயில், செவ்வாய்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் மீது மோதியது. பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தவாறே தடம் புரண்டன. கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.   Source link

70வது பிறந்தநாள் விழா: அறிவாலயத்தில் மரம் நட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சருக்கு அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஏராளமானோரில் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அறிவாலயம் வளாகத்தில் மரக்கன்று நட்டார். தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது குடும்பத்தினர் முன்னிலையில்,  வீட்டில் கேக் வெட்டி மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டினார்.  அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, … Read more

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் எச்.ராஜா, திருமயம் நீதிமன்றத்தில் ஆஜரானார். எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை மே 26ம் தேதிக்கு திருமயம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்

மதுரை: கண்மாய்கள், நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. சிவகங்கை தனிப்பட்டு கண்மாய்கள், அரசுநிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் தொடர்பான வழக்கில் அரசு பதில் அளித்துள்ளது. சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நிதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.

66 வயது நடிகருக்கு இளம் நடிகை 30 முறை கிஸ் : ரசிகர்கள் கடும் விமர்சனம்

 66 வயது நடிகருக்கு இளம் நடிகை முத்தம் தரும் காட்சிகள் 30 முறை இடம்பெற்ற வெப்சீரிஸை ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். த நைட் மேனேஜர் என்ற ஆங்கில வெப்சீரிஸ், இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் …

70வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து!

டெல்லி: 70வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி தொலைபேசியின் வாயிலாகவும், ராகுல் காந்தி ட்விட்டர் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

3வது டெஸ்ட்: இந்திய அணி 109 ரன்களில் சுருண்டது| 3rd Test: India bowled out for 109 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 22 ரன்கள் எடுத்தார். ஆஸி., வீரர் குனேமான் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என்ற முன்னிலை பெற்றதுடன், தொடர்ந்து நான்காவது முறையாக ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி வென்ற … Read more

வீட்டில் இருந்து மாயமான தனியார் நிறுவனஊழியர் பிணமாக மீட்பு

பெங்களூரு- ஆண் பிணம் மீட்பு பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் லைகாட் அலி கான்(வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் சம்பவத்தன்றும் மாலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை இதையடுத்து அவர்கள் இதுபற்றி சந்திரா … Read more

"தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று நம்புகிறோம்" – ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

இந்தூர், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது;- “இந்த தொடரில் சில சமயம் நாங்கள் நல்ல நிலையில் இருந்தும், அதை சாதகமாக்கி முன்னெடுத்து செல்ல முடியவில்லை. குறிப்பாக டெல்லி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் திட்டமிடலுக்கு ஏற்ப செயல்படாததால் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.28 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more