ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது

சென்னை: ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலத்தில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேருக்கு ஆயுள்: குற்றவாளிகளுக்கு உதவிய 2 பெண்களுக்கும் தண்டனை

காசியாபாத்: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேருக்கு ஹாபூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் தவுலானா கிராமத்தில் கடந்த 2007ல் நடந்த திருவிழாவின் போது வைக்கப்பட்ட கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 16 வயது தலித் சிறுமியை இரண்டு பெண்கள் அழைத்து சென்றனர். அன்றிரவு திருவிழா முடியும் நேரத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பு மூலம் தண்ணீர் எடுத்து வர அந்த … Read more

சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை ஐஐடியில் பயின்றுவரும் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஐஐடியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த  வைப் புஷ்பக் ஸ்ரீ சாய். இவர் ஐஐடியில் உள்ள அலக்நந்தா தங்கும் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அதன்பின் அவரது … Read more

உள்துறை அமைச்சகத்தில் நீட் மசோதா உள்ளது: ஜனாதிபதி தகவல்| Ministry of Home Affairs has NEET bill: President Dravupati Murmu informs

புதுடில்லி: நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தகவல் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி வெங்கடேசன் எம்.பி. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிலளித்து கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்டமசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுடில்லி: நீட் விலக்கு மசோதா … Read more

கெட்ட வார்த்தை பேசியதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராணா

பாகுபலி படம் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. சமீப காலமாக பிரபல ஹீரோக்கள் வெப்சீரிஸ்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் நடிகர் ராணாவும் முதன் முறையாக ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார். நிஜத்தில் இவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ், இந்த வெப்சீரிஸில் ராணாவின் தந்தையாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. சமீபத்தில் எட்டு எபிசோடுகளாக வெளியான … Read more

இம்ரான் கானை கைது செய்ய தீவிரம்: போலீசார்- தொண்டர்கள் மோதல்| Islamabad police, PTI supporters clash outside Imran residence

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொண்டர்களும் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் 28ம் தேதி … Read more

நீட் விலக்கு மசோதா – ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம்

புதுடெல்லி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி … Read more

ஐபிஎல் 2023 : ஜியோ சினிமாவின் விளம்பர தூதராக சூர்ய குமார் யாதவ் ஒப்பந்தம்

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த வருடன் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான போட்டிகள் ஜியோ சினிமா தளத்தில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும், இதனை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ … Read more

இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். … Read more

அரச பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு, இணத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை 2023.03.25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாணசபைகளின் … Read more