ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.. மத்திய அரசு தகவல்.!

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திரநாத் குமார் மற்றும் கனிமொழி ஆகியோர் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு தொல்லியல் துறைக்கு 5.25 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் கட்ட சிறந்த கட்டிடக்கலை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் … Read more

10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்.. ரைபிள் படைப் பிரிவில் வேலைவாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அசாம் ரைபிள் படைப் பிரிவில் செவிலிய உதவியாளர், ஆய்வக உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பதவி கல்வித்தகுதி Trade – Bridge and Road 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் என்ஜினியரிங் படிப்பில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். Trade – Religious … Read more

பள்ளிகளில் தமிழை கட்டாய பாடம் ஆக்க மறுப்பு: மக்களவையில் மத்திய அரசு பதில்..!!

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது. நாடு … Read more

16 தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் கடிதம்!!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12-ந்தேதியன்று இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்துக்குள் நடந்த 3-வது சம்பவம் ஆகும். மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். … Read more

செலுத்திய பணத்திற்கு ரசீது தர மறுத்து அடாவடி செய்த நகராட்சி ஊழியர்கள்.. ரசீது கேட்டது குத்தமா போயிடுச்சா ?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் இலவச ஆதார் பதிவு சேவைக்கு பெறப்பட்ட பணத்திற்கு ரசீது கேட்ட இளைஞரை அலுவலக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர பதிவு மையத்தில் புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர், முகவரி மாற்றம் மற்றும் கைரேகை பதிவு போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரைக்குடி அடுத்த பலவான்குடியைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞர் தனது தங்கையை கட்டாய ஆதார் பதிவிற்காக … Read more

தமிழகத்தில் தினசரி மின்தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சம்

சென்னை: தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில், விவசாயத்துக்கு 2,500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், வீடுகளில் … Read more

அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவில் உள்ள பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன்பின், அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாக சரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், கூட்டுக்குழு விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதுதொடர்பாக மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதித் துறை இணை அமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் … Read more

அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் மேலும் ஒரு வங்கி மூடல்: வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. இதனிடையே, வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு மத்திய வங்கியும் வைப்பு நிதி காப்பீட்டுக் கழகமும் உறுதி அளித்துள்ளன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி … Read more

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகள்: காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை!

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் காவல் துறையினர், எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என காவல் துறையினர் நன்னடத்தை பிரமாணம் பெறுவது உண்டு. இந்த நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு, கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அரசாணை … Read more