சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: புதுச்சேரி பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு| Rs.300 subsidy on cooking gas cylinder: Rangasamy announced in Puducherry budget

புதுச்சேரி: ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை, முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 9ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, சட்டசபையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: ரூ.50 ஆயிரம் … Read more

கோயம்பேடு சந்தை: (14.03.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 14/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 18/16/14 ஆந்திரா வெங்காயம் 12 நவீன் தக்காளி 25 நாட்டு தக்காளி 23/20 உருளை 25/23/21 சின்ன வெங்காயம் 55/45/40 ஊட்டி கேரட் 35/33/30 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 55/50 பீட்ரூட். ஊட்டி 30/25 கர்நாடக பீட்ரூட் 20/16 சவ் சவ் 23/20 முள்ளங்கி 16/13 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 70/60 … Read more

கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தையை சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற பாசக்கார தாய்..!!

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலிம்பாய் வாகேர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஹூசேனா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ரெஹான் மற்றும் ஆர்யன் என்ற ஆண் குழந்தைகள் இருந்தன. தம்பதிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் என்ற வாலிபருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு தனது குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக … Read more

அதிரடி அறிவிப்பு! இனி கேஸ் மானியம் ரூ.300!!

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் ரூ.300 வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும், சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின்கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், செவிலியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் வீடு கட்டும் திட்டம் … Read more

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்-சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். காலை 10.45 மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கி 11.10க்கு நிறைவு செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்: ”புதுச்சேரியி்ல் 2023-24ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ. 11,600 கோடி என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.6154 கோடியாகவும், மத்திய அரசு நிதியுதவி ரூ. 3177 கோடியாகவும், மத்திய அரசு திட்டங்களின் கீழ் தரப்படும் நிதி ரூ. 620 கோடியாகவும் உள்ளது. … Read more

'அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் ஜி ஜின்பிங்?' – உலக நாடுகள் உற்று நோக்கும் பயணம், ஏன்?!

“கடுமையான பின்விளைவுகளை…” ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ படையில் இணைவதாக அறிவித்தது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், “உக்ரைன் நேட்டோ படையில் இணைய தொடர்ந்து முயன்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார். உக்ரைன் பாக்முட் நகரம் இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து ரஷ்ய படைகளுக்கு, உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார் புதின். அதன்படி இருநாடுகளுக்கும் இடையேயான போர் … Read more

கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடை பிடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த சிலமாதங்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்றுபாதிப்பு தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கு பின்னர் தொற்றின் தீவிரத்தால் திருச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா தொற்று பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியஅரசு … Read more

இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: ரந்தீப் குளேரியா

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் முதியோர், இணை நோயாளிகள் போன்ற ஆபத்து அதிகமுள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும், காய்ச்சல் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் ரந்தீப் குளேரியா வலியுறுத்தினார். இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவரும், கோவிட் பணிக்குழுவின் தலைவருமான ரந்தீப் குளேரியா நேற்று மகாராஷ்டிர … Read more

கராச்சியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்: நைஜீரிய பயணி உயிரிழப்பு

புதுடெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320-271என் விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, நைஜீரிய பயணி அப்துல்லாவுக்கு (60) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கராச்சி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவ குழு வினர் பயணியை … Read more