ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை..! சென்னை அணிக்காக புதிய சாதனை படைக்கும் தோனி

சென்னை,

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார்.16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.

.2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று தோனிக்கு பரிசளிப்போம் என்று சி.எஸ்.கே. அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.