Honor Magic Book X14, X16 லேப்டாப்கள் அறிமுகம்! பட்ஜெட் விலையில் ஒரு ஸ்லிம் லேப்டாப்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் லேப்டாப் செக்மென்ட்டில் சீனாவை சேர்ந்த Honor நிறுவனம் அதன் Magic Book Series 2023 மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப் இரண்டு விதமான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் நமக்கு கிடைக்கிறது. இவை 14 மற்றும் 16 இன்ச் ஸ்க்ரீன் அளவு கொண்ட மாடல்கள் ஆகும்.

​Honor Magic Book X14 (2023)​இந்த லேப்டாப் ஒரு 14 இன்ச் முழு HD (1920×1080) IPS ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இதன் Screen to Body Ratio என்று பார்த்தால் 88% உள்ளது. இதன் அதிகபட்ச பிரைட்னஸ் அளவு 300 nits ஆகும்.இந்த லேப்டாப் Intel 12th gen i5-12450H Processor வசதி கொண்டுள்ளது. இதில் 16GB LPDDR4X RAM வசதி, 512GB SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதன் ஸ்டோரேஜ் அளவை 1TB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
Honor Magicbookஇதன் பேட்டரி தேவைக்கு 60Whr உள்ளது. கூடுதலாக 65W USB Type C சார்ஜிங் போர்ட் உள்ளது. மேலும் இதில் 1 webcam, 2 USB Type A போர்ட், 1 HDMI மற்றும் USB Type C போர்ட் வசதி உள்ளது. இவற்றில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேன் வசதியும் இடம்பெற்றுள்ளது.
​Honor Magic Book X16 (2023)இதில் 16 இன்ச் முழு HD (1920X1080) IPS டிஸ்பிளே வசதி, 89% Screen to Body Ratio அளவு உள்ளது. இதிலும் அதே 12th gen intel i5 Processor வசதி, 1TB வரை ஸ்டோரேஜ், 16GB RAM, தனியாக Numpad போன்ற வசதிகள் உள்ளன. இதன் அகலம் 17.9mm மற்றும் எடை 1.75 கிலோ ஆகும்.
இதிலும் Magic Book 14 லேப்டாப்இல் இடம்பெறட்டுள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெரிய அளவு டிஸ்பிளே வசதி, கூடுத கீபோர்டு ஆப்ஷன்கள் எடை குறைவான அமைப்பு, பிரீமியம் கட்டமைப்பு என அனைத்தும் உள்ளது.
​விலை விவரம் (Honor Magic book Price)இதன் 14 இன்ச் மாடலில் 8GB + 512GB ஸ்டோரேஜ் மாடல் இந்தியாவில் 48,990 ஆயிரம் ரூபாய் விலையிலும், 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் மாடல் 51,990 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
16 இன்ச் மாடல் பொறுத்தவரை 8GB RAM + 512GB ஸ்டோரேஜ் மாடல் 50,990 ஆயிரம் ரூபாய் விலையிலும், 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் மாடல் விலை 53,990 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
Honor Magic book Saleஇந்த இரு லேப்டாப் Amazon மூலமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு சில வங்கிகளில் 2,500 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கின்றன.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.