சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் இன்று மேல்முறையீடு

சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. … Read more

பிற நாடுகளை பற்றி விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமையாக மேற்கத்திய நாடுகள் நினைக்கிறது: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்

பெங்களூரு,: மற்ற நாடுகள் குறித்து விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமை என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.  கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு பாஜ ஏற்பாடு செய்திருந்தது. கப்பன் பூங்காவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்முறை வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் உள்பட ஏராளமான இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more

டெல்லியில் இன்று திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம்

டெல்லி: டெல்லியில் திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா(2), ரஹ்மத், சௌபிக் ஆகிய 3 பேர் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

இத்தாலி அலுவல் மொழியில் ஆங்கிலத்துக்குத் தடை? | Ban on English as official language in Italy?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகாரப்பூர்வ தொடர்புகளில் ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களுக்கு தடை விதித்துள்ள அரசு, மீறுபவர்களுக்கு 89 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தச் சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வ தகவல் … Read more

Padayappa Flashback: ஐஸ்வர்யா ராய் மட்டும் இல்லை.. நீலாம்பரி கேரக்டரை ரிஜக்ட் செய்த டாப் ஹீரோயின்ஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தலைவர் 170, லால் சலாம் ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், 1999ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது நீலாம்பரி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மட்டும் இல்லாமல் மேலும் இரண்டு முன்னணி நடிகைகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரின் படையப்பா 90களின் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய மாஸ் … Read more

இன்று காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு திருவிழா நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3ம் தேதி) தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள … Read more

ஆகான்க்சா துபேயுடன் ஹோட்டலில் 17 நிமிடம் இருந்த நபர் யார்? சிசிடிவி வெளியிட்ட போலீசார்..!!

‘மேரி ஜங் மேரா பைஸ்லா’ என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஆகான்க்சா துபே. அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார். இவர், தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் … Read more

நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு அளிக்க முடிவு..!!

நாடு முழுவதிலும் நகரப் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் இவை அமைக்கப்படுகின்றன. இந்த சுங்கச்சாவடிகளை அமைக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கு அதில் சுங்கவரி வசூல் செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான நிலங்கள், விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு நிர்ணயிக்கும் விலை மட்டுமே நிலம் அளித்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த முறையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் ஒரு புதிய முடிவு … Read more