ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, விசாரணை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக வழக்கில் நீதிபதியின் தீர்ப்புக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை, இறுதி விசாரணையா அல்லது இடைக்கால நிவாரணமா என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவு

சேலம்: தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுக் திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான, 6 முதல் 18 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,832,235 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,832,235 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,056,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,009,980 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,915 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்டு பலாத்காரம் செய்து 17 பெண்கள் படுகொலை: குஜராத் கலவர வழக்கில் 26 பேர் விடுதலை

கோத்ரா: குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது கடந்த 2002ல் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.  இது தொடர்பாக பல வழக்குகளின் விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இவற்றில் கலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய விசாரணையும் நடந்து வந்தது. அங்கு 17 முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் … Read more

Nayanthara : நயன்தாரா மகன்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா? அட வித்தியாசமா இருக்கே!

சென்னை : நடிகை நயன்தாரா தனது மகன்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐயா திரைப்படத்தில் கொழுகொழு பெண்ணாக க்யூடாக நடித்திருந்தார் நயன்தாரா. முதல் படத்திலேயே “ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்” என பாட்டுப்பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வல்லவன், சந்திரமுகி, கஜினி கள்வனின் காதலி என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். … Read more

ஏழுகிணறு அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டுத் தற்கொலை – கரணம் என்ன தெரியுமா?

சென்னையில் உள்ள ஏழுகிணறு பகுதியில் போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர்கள் அருண்குமார்-சாந்தி தம்பதியினர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர்களில் ஒருவர் மகாலட்சுமி. இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மகாலட்சுமி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வந்த விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் அவர், ரூ.முப்பது ஆயிரம் வரை பணத்தை கட்டி இழந்துள்ளார். இதையறிந்த அவரது தாய் … Read more

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் உடல்நல குறைவால் சென்னையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். சிலர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான … Read more

இனி கர்ப்பிணிகள், குழந்தைகள்,முதியவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்..!!

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,824 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, கேரளாவில் நேற்றைய நிலரவப்படி, கொரோனா … Read more