ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகேம ஹேமரதன நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 56 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்திற்கு, நாடு … Read more

சகோதரன் கள்ளத்தொடர்பால் ஐடி ஊழியர் காரோடு எரித்துக் கொலை..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (35). ஐடி ஊழியரான இவர் தற்போது ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இதனிடையே, நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற சகோதரன் (தம்பி) உள்ளார். புருஷோதமனுக்கும் அதேகிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்த ரிபிஜெயா தன் மனைவியுடனான கள்ளத்தொடர்பை முறித்துக்கொள்ளும்படி புருஷோதமனிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரிபிஜெயாவுக்கும் புருஷோதமனுக்கும் இடையே மோதல் … Read more

சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் பற்றிய தீ அணைப்பு..!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தின் 14-வது மாடி மேல்தளத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அரைமணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதை தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. … Read more

நூலகத்திற்கு படிக்க வரும் மாணவியரிடம் நானும் ரவுடி தான் என வசனம் பேசிய நபர் கைது…!

சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவிகளை மது போதையில் கிண்டல், கேலி செய்த நபர், தட்டிக்கேட்ட சக மாணவர்களிடம் தன்னை பெரிய ரௌடி எனக் கூறி பில்டப் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்ட மைய நூலத்துக்கு வந்த மாணவிகளை தனது செல்போனில் படம் பிடித்த அந்த நபர், கேலி செய்யும் தொணியில் பேசினார் என்று கூறப்படுகிறது. அதனைப் பார்த்த சக மாணவர்கள் அந்த நபரை தட்டிக்கேட்கவே, தன் பெயர் கிச்சிப்பாளையம் சரத்குமார் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி 50-வது ஆண்டு பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 60-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் வந்தார். நேற்று காலை ராஜபாளையத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தனது மனைவி லட்சுமி … Read more

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு

சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) மேல்முறையீடு செய்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி(52) பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார். வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் … Read more

தீப்பற்றி எரிந்த பஸ்: 14 பயணிகள் தப்பினர்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து 14 பயணிகளுடன் கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன்(45) ஓட்டி சென்றார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நள்ளிரவு 12.45 மணியளவில் பஸ் வந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக டிரைவர்  பஸ்சை  நிறுத்தி இறங்கி பார்த்தார். அப்போது பஸ்சின் பின்புறம் லேசாக தீப்பற்றியிருந்தது தெரிந்தது.  இதையடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகளை எழுப்பி கீழே இறக்கினார். அடுத்த சில … Read more

அமலாக்கத்துறை சோதனை சட்டீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில்,‘‘ கடந்த ஒரு மாதமாக அமலாக்கத்துறை மாநிலத்தில் சோதனை நடத்தியது.  50  இடங்களில் நடத்திய சோதனையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த 29ம் தேதி ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபார், அவருடைய சகோதரர் அன்வர், மதுபான ஆலை அதிபர் பல்தேவ் சிங் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட இந்த சோதனைகள்  … Read more

Vignesh Shivan: என்ன விக்னேஷ் சிவன் இப்படி இறங்கிட்டாரு.. ஹீரோயின்களை ஓவர்டேக் செஞ்சிடுவாரு போல!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட்டுக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியராக நடித்து அசத்தி இருப்பார். ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் கணவர் நானும் ரவுடி தான் … Read more

மனித உரிமை மீறல்.. இதுதான் "பொதுவுடமை கட்சியின்" இலட்சணமா..? ஜான்பாண்டியன் கடும் கண்டனம்..!!

வாய் கிழிய ஏழைகள் தொழிலாளர்கள் சமத்துவம் பேசும் பொதுவுடமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்..!! சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசால் கீழடி அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த  மார்ச் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 70000 பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தை … Read more