திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும்… வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும். தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பராந்தக சோழன், ராஜராஜ சோழன், விக்ரம சோழன் என சோழ அரசர்கள் பலரும் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சீயமங்கலம் குகைக்கோயிலுக்கு அருகில் உள்ள இந்த அரங்கநாதர் திருக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த சில … Read more

மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

மன்னார்குடி: மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் உள்ள மன்று நகரில் 4 கிளைகளுடன் உள்ள தென்னைமரத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் மன்று நகரில் சாலை ஓரம் தென்னை மரங்கள் உள்ளது. இதில் ஒரு தென்னை மரத்தின் தண்டிலிருந்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதில் ஒரு கிளையில் தென்னை மட்டைகளுடன் தேங்காய் காய்த்துள்ளது. இதே போல் மற்றொரு கிளை யில் இருந்து மற்றும் ஒரு கிளை முளைத்து, அதிலும் தேங்காய்கள் … Read more

எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பெயர் பலகையில் உள்ள விளக்கில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீச்சல் பயிற்சியின்போது பரிதாபம்: ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள ஆற்றுக்கு அழைத்துச் சென்றார். ஆற்றில் ஒரு தற்காலிக தடுப்பணை உள்ளது. அந்த பகுதியில் வைத்து லிஜோ தனது மகனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நெபின் ஜோசப் சகதியில் சிக்கிக்கொண்டான். உடனே அவனை … Read more

Anirudh gift : லியோ பாடல் பாடிய சிறுவன்.. அனிருத் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்தப் படத்தின் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது படத்தின் சூட்டிங் 50 நாட்களை கடந்து காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பாடல்களில் அனிருத்தின் மேஜிக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். லியோ படம் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், … Read more

'பிறரைப் பற்றி விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது' – மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. சார்பில் இளம் வாக்காளர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு வாக்காளர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் … Read more

சூப்பர் ஓவரில் அசத்திய தீக்ஷனா…முதல் டி20 போட்டியை கைப்பற்றிய இலங்கை…!

ஆக்லாந்து, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 … Read more

ரிஷி சுனக்கின் ஒரு வார விமான பயணத்தில் ரூ.5.07 கோடி செலவு; எதிர்க்கட்சிகள் கண்டனம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டில் அவர், ஒரு வாரத்தில் மேற்கொண்ட விமான பயணத்திற்கு ரூ.5.07 கோடி வரை செலவாகி உள்ளது என தெரிய வந்து உள்ளது. அவர் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்ததில், மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரதமர்களில் பெரிய பணக்காரராக திகழும் சுனக்கிற்கு, இந்த … Read more