சென்னை பக்கிங்காம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு 

சென்னை: பக்கிங்காம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சென்னையின் மிக முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகும். இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த இரண்டு சாலைகளையும் பக்கிங்காம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், … Read more

“பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் போலியானதா?” – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து கேஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு கல்விச் சான்றிதழ் நகல்களை வழங்கத் தேவையில்லை என்ற குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “கல்வியறிவு இல்லாத அல்லது குறைவாக கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர். பிரதமர் தனது கல்வி குறித்த சான்றிதழ்களை காட்டாததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவரது ஈகோ. தன்னுடைய கல்விச் சான்றிதழை யாரிடமும் காண்பிக்க … Read more

தமிழ்நாடு வானிலை: 15 மாவட்டங்களில் கொட்டும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01.04.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், … Read more

பிரான்சில் வருவாய் இழப்பை சந்தித்த வெளிநாட்டு தம்பதி: குடியிருப்பு அனுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

பிரான்சில் வாழும் வெளிநாட்டு தம்பதியர், புயலால் வருவாய் குறைந்ததால், எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்தித்துள்ளார்கள். குடியிருப்பு அனுமதியில் பிரச்சினை தென்மேற்கு பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களான தம்பதியர், தாங்கள் வாடகைக்கு விட்டிருந்த கட்டிடங்கள் புயலால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டது, வருவாய் குறைந்தது. வருவாய் குறைந்ததைத் தொடர்ந்து, வழக்கமாக பல ஆண்டுகளுக்கான குடியிருப்பு அனுமதி கொடுக்கப்படும் நிலையில், இப்போது அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தற்காலிக குடியிருப்பு அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த தம்பதியர் பிரான்சில் 10 ஆண்டுகளுக்கும் … Read more

வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காலச் சூழல் காரணமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் காளான்களாக உருவெடுத்துள்ளது. வாடகைத் தாய் சட்டங்கள் பற்றி நீதித்துறை அதிகாரிகள் முழுமையாக அறிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற அரசின் மருத்துவ வாரிய சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்ற … Read more

நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு கிலோவிற்கு 18.39 விலை நிர்ணயம்: தேயிலை வாரியம் தகவல்

நீலகிரி: நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு கிலோவிற்கு 18.39 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேயிலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு

சித்தூர் : பிரதமரின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால், ஆந்திர மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என சித்தூரில் நடந்த விழாவில் மாநில தலைவர் சோமு வீரராஜூ பேசினார்.சித்தூர் மிட்டூர் பகுதியில் புதிதாக கட்டியுள்ள பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம்  அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மீட்டூரில் நடந்த விழாவில் பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜூ தலைமை தாங்கி பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் பாஜக … Read more

கீழடி அருங்காட்சியகம்.. ஆச்சரியத்தோடு பார்த்த சூர்யா,ஜோதிகா..விளக்கம் அளித்த வெங்கடேசன் எம்.பி

Tamilnadu oi-Jeyalakshmi C மதுரை: கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் குடும்பத்தோடு வந்து பார்வையிட்டனர். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்ததோடு அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் 2600 ஆண்டுகள் பழைமையாக பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன. கொந்தகையில், 100க்கும் … Read more

தற்கொலை செய்ய நினைத்தேன் : ‛குத்து' ரம்யா திடுக்கிடும் தகவல்

தமிழில் சிம்பு நடித்த 'குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. பின்னர் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். ஆனால் அவரது இயற்பெயரான திவ்யாஸ் ஸ்பந்தனா என்ற பெயரில் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா தொகுதி எம்.பி.ஆனார். அதன்பிறகு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த அவர் அரசியலை விட்டு விலகி தற்பொது படத் தயாரிப்பிலும், நடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் தற்கொலை … Read more