வார்டு மறுவரையறை: ஓபிஎஸ் வைத்த கோரிக்கை, உறுதி அளித்த கே.என்.நேரு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வார்டு மறு வரையறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்து பேசினார். வார்டு மறு வரையறை வேண்டும்! அப்போது கேள்வி பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறு வரையறை செய்ய தமிழக அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். குழு அமைத்து நடவடிக்கை! இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, “தமிழ்நாடு … Read more

RK Suresh: ஆருத்ரா கோல்டு மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு? தலைமறைவு?

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்கே சுரேஷ். 2015ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மருது, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், காளி,புலிக்குத்தி பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை, விசித்திரன், விருமன், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நடத்திய பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் … Read more

அமெரிக்க மற்றும் ருமேனிய படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் பயிற்சி

நேட்டோ ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க மற்றும் ருமேனியப் படைகள் இணைந்து ருமேனிய விமானப்படை தளத்தில் வான்வழித் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டன. நேட்டோ படைகளை வலுப்படுத்துதல், நட்பு நாடுகளுக்கு உறுதியளித்தல் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கும் முயற்சியாக கடந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 101வது வான்வழிப்படை ருமேனியாவிற்கு வந்தது. கடந்த வியாழக்கிழமை ருமேனிய வான், கடல் மற்றும் தடைப்படைகளுக்கு கருங்கடலில் பயிற்சி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று உக்ரைனில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள … Read more

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது … சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டங்களை பிரிப்பது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அவர் தெரிவித்தார். திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை பிரித்து புதிதாக கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது..!!

நீலகிரி: உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது. இன்று தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் குதிரை பந்தயத்தில் 550 பந்தய குதிரைகள் பங்கேற்கின்றன. முக்கிய பந்தயமான 1,000 கின்னீஸ் ஏப்.14-ம் தேதியும், 2,000 கின்னீஸ் ஏப்.15-ம் தேதியும் நடைபெறுகிறது. நீலகிரி தங்கக் கோப்பைக்கான பந்தயம் மே 21-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தயங்களை காண சிறுவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க அவகாசம் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!!

சென்னை: 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க அவகாசம் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அரசு வாகனங்களை அழிப்பது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 15 ஆண்டுகள் ஆன அரசு வாகனங்கள், பொதுத்துறை வாகனங்களை அழிக்க அரசு அவகாசம் கேட்டுள்ளது.

ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவர் முதல்வர் ஜெகன்மோகன்-திருப்பதி எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுபவர் முதல்வர் ஜெகன்மோகன் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர  பேசினார்.திருப்பதி இந்திரா மைதானத்தில், ஒய்எஸ்ஆர் ஆசரா திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 3வது தவணையாக காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எம்எல்ஏ  கருணாகர , மாநகராட்சி ஆணையர் அனுபமா அஞ்சலி, துணை மேயர் முத்ரா நாராயணா, கார்ப்பரேட்டர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், எம்எல்ஏ கருணாகர  மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹8.12 … Read more

\"கரகர குரல்..\" கில்லர் பூஞ்சையின் அறிகுறியாம்.. கழுத்தில் ஆப்ரேஷன் எல்லாம் செய்து.. ஐயோ பாவம்! பகீர்

India oi-Vigneshkumar கொல்கத்தா: பொதுவாகக் கரகர குரல் ஏற்பட்டால் நாம் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால், அதுவே இந்த நபருக்கு மிக மோசமான பாதிப்பின் அறிகுறியாக இருந்துள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் நமக்கு பல்வேறு நோய்ப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்டு வந்த நோய்கள் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனிடையே மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஒருவர் கில்லர் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்டார். … Read more

கேரளாவில் குஷி படப்பிடிப்பை தொடரும் சமந்தா

யசோதா படத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக மயோசிடிஸ் எனும் தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்காக கிட்டத்தட்ட மூன்று மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலிருந்து ஓய்வெடுத்து வந்தார் அதைத்தொடர்ந்து கடந்த மாத துவக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் இணைந்து நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சிவா நிர்வானா இயக்குகிறார். ஹேசம் அப்துல் வகாப் இசையமைக்கிறார். தனது நடிப்பில் அடுத்ததாக வரும் … Read more