பிளே ஸ்டோரிலிருந்து லோன் செயலிகள் நீக்கம் – சைபர் க்ரைம் அதிரடி..!

ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக போலி கடன் செயலியை உருவாக்கி மோசடி கும்பல் கடன் கொடுத்து வந்தது. கொடுத்த பணத்தை விட அதிக தொகையை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தனர். இதனால் தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகளவில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் கடிதம் எழுதி இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக சட்டவிரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த 221 கடன் செயலிகளை கூகுள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத இந்த சட்டவிரோத செயலிகளில் சிக்காமல் பொதுமக்களைப் பாதுகாக்க கூடுதல் 61 லோன் ஆப்களை அகற்ற கோரி மாநில சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.