
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கேரள காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மகன் சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “அப்பா வைரஸ் நிமோனியாவால் அவதிப்படுவதால் மருத்துவமனையில் இருக்கிறார். இப்போது, அவரைப் பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. உங்கள் எல்லா பிரார்த்தனைகளையும் நாடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் உம்மன் சாண்டி தொண்டை சம்பந்தமான நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் உடல் நலம் தேற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டு இருக்கிறார்.