பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்..!!

கடந்த சில மாதங்களில் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்துவருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் மனோபாலாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து ரசிகர்கள் மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

80களில் ரஜினி, கமல் ஆகியோர் படங்களில் சிறுவேடங்களில் நடித்துவந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற கமல் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்னையால் அவதி அடைந்து வந்த விஜயலட்சுமி, சில தினங்களுக்கு முன் கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நடிகை விஜயலட்சுமியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.