பேருந்து வளைவில் திரும்பியபோது தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!!

தனியார் பேருந்து சாலையில் வேகமாக பயணித்த போது, உள்ளே இருந்த இளம்பெண் வளைவில் திரும்பும்போது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பினார். அப்போது, பேருந்தின் முன்புறம் படிக்கட்டு அருகே … Read more

மஞ்சுவிரட்டில் காளை முட்டி பலியான காவலர்; உடலை தூக்கிச் சுமந்த எஸ்.பி – நிவாரணம் அறிவித்த முதல்வர்!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டில் காளைகளை வரிசையாக அவிழ்த்துவிடாமல், ஆங்காங்கே அவிழ்த்துவிட்டதால், பார்வையாளர்களை நோக்கி தாறுமாறாக ஓடிய காளைகள், பார்வையாளர்கள் பலரை முட்டித் தூக்கி வீசின. அங்கு பாதுகாப்புப்பணியிலிருந்த மீமிசல் காவல் நிலையக் காவலர் நவநீதகிருஷ்ணன், பார்வையாளர்களை, திடலுக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். உயிரிழந்த காவலர் அப்போது, யாரும் எதிர்பாராதவகையில், சீரிப்பாய்ந்துவந்த ஒரு காளை, கண் … Read more

பெண் தொழிலதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நகை, பணத்தை சுருட்டிய பெண்.. வெளிநாடுகளுக்கு தப்பாமல் தடுக்க லுக்அவுட் நோட்டீஸ்..!

கோவையில் பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து, 100 சவரன் நகை, 2 கோடி பணத்துடன் தலைமறைவான பெண் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஸ்வரியின் வீட்டிலிருந்த நகை பணத்தை அள்ளிச்சென்ற அந்த வழக்கில், இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபரான வர்ஷினியையும், நவீன் என்பவரையும் தேடி வரும் போலீசார், வர்ஷினி வெளிநாடு தப்பிச் … Read more

திமுக எம்.பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர்கள் சந்தானகுமார், முத்துராமலிங்கம் ஆகியோர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். சந்தானகுமார் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை … Read more

மணிப்பூர் வன்முறை | கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு

இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் 10 மலை மாவட்டங்களில் இந்தப் பேரணி … Read more

அரிய வாய்ப்பு.. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. அரசு முக்கிய அறிவிப்பு

பிரெய்லி எழுத்துக்களை படிக்க உதவும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் (Electronic Braille Reader) 2023-2024-ஆம் நிதியாண்டில் பெறத் தேவையான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட … Read more

கண்டதும் சுட உத்தரவு.. மணிப்பூரில் கைமீறிப் போனது நிலைமை.. துப்பாக்கியை எடுக்கும் ராணுவம்!

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் கை மீறி சென்றதை அடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடும் உத்தரவை (Shoot At Sight) அம்மாநில அரசுபிறப்பித்துள்ளது. ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கியும் கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்ஸ்’ சமூக மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் (scheduled Tribe) அந்தஸ்து வழங்கக் கோரி … Read more

Trisha: 'லியோ' படக்குழு கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்: அமர்களமாய் பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் திரிஷா. ‘வயசானாலும் உங்க அழகும் இளமையும் குறையவே இல்லை’ என்ற வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ திரிஷாவுக்கு கனகச்சிதமாக பொருந்தும். அந்தளவிற்கு தனது இளமையான அழகால் இன்றளவும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டி போட்டுள்ளார். இந்நிலையில் இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் திரிஷாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் … Read more

சீதா ராமன் அப்டேட்: டென்ஷனான சீதா.‌. மகாவுக்கு விட்ட சூப்பர் சவால்!!

Seetha Raman Today’s Episode Update: டென்ஷனான சீதா.‌. மகாவுக்கு விட்ட சூப்பர் சவால் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

கட்டுக்கடங்காத வன்முறை.. கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவு..!

மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காத சூழலில், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Meiteis சமூகத்திற்கு, பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பழங்குடியினத்தவர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்த நிலையில், சிஆர்பிசி 1973 -ன் படி கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதீத மோதலின் போது அனைத்து எச்சரிக்கைகளுக்கு பிறகு, வன்முறையாளர்களை கண்டவுடன் சுட … Read more