சொந்த சாதி மக்களையே தவறாக வழி நடத்துகிறாயே.. உன் மண்டைல ஏறாது.. உன் சாதி புத்தி.. கிழித்த திருமாவளவன்

விழுப்புரம்:
கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக

நிர்வாகியும், வழக்கறிஞருமான ஒருவரை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்

கட்சித் தலைவர்

.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் நிலவியது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை கோயிலை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் ஓபிசி சமூகத்துக்கு தலைவர்களாக தங்களை காட்டிக் கொள்பவர்கள் அந்த மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை தருவதில்லை. இதற்கு சரியான உதாரணத்தை கூற வேண்டும் என்றால், மதுரை மாவட்டம் மேலவளவில் நடந்த படுகொலையை கூறலாம்.

அறிவார்ந்த தலைவர்கள் இல்லை:
மேலவளவு என்பது ஒரு பஞ்சாயத்து. அங்கு தலித்துகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷன் அந்த பஞ்சாயத்தை தனித்தொகுதியாக அறிவித்தது. அங்கு வேறு யாரும் போட்டியிட முடியாது. தலித்துகள் மட்டும்தான் போட்டியிட முடியும். இதை மாற்ற முடியாது. இது தேர்தல் கமிஷன் எடுத்த முடிவு. ஆனால், இதை அங்குள்ள ஓபிசி சமூகத்தினருக்கு எடுத்து சொல்ல அறிவார்ந்த தலைவர்கள் இல்லை. இதனால்தான் அங்கு தலித் வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்டார். எது சட்டமோ, எது விதிமுறையோ அதை கூறும் அறிவில்லாதவர்கள் ஓபிசி சமூகத்தினரின் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களை தூண்டிவிடும் வேலையை மட்டுமே செய்வார்கள்.

அறிவு வேண்டாமா
?
அப்படிதான் ஒரு மூடன் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் போய் பேசியிருக்கிறான். மூடன் என்றுதான் சொல்ல வேண்டும். சட்டம் படித்தவனுக்கு தெரிய வேண்டாமா? அறிவு இருக்க வேண்டாமா? சொந்த சாதி மக்களை இப்படி தவறாக வழிநடத்தலாமா? அட மூடர்களே.. சொந்த சாதி மக்களையே கேடாக, தவறாக நீங்கள் வழிநடத்துகிறீர்களே.. படிக்காதவன் சொன்னா கூட பரவாயில்லை. சட்டம் படிச்சவன் சொல்றான். உச்ச நீதிமன்றத்துக்கு போனாலும் விட மாட்டாராம். என்ன பண்ணிடுவ நீ? அறிவுகெட்ட முண்டங்களே, உங்கள் மக்களையே இப்படி பலிகடா ஆக்குகிறீர்களே.

உன் மண்டைல ஏறாது.. சாதி புத்தி:
சட்டம் தெளிவா இருக்கு. இந்திய அரசமைப்புச் சட்டம் தீண்டாமையை குற்றம் எனச் சொல்கிறது. இந்து அறநிலையச் சட்டம் கோயிலில் எல்லோரும் வழிபாடு நடத்த உரிமை இருக்கு எனச் சொல்கிறது. நீ சமத்துவம் பேச வேண்டாம். சமூக நீதி பேச வேண்டாம். அதுல்லாம் உன் மண்டைல ஏறாது. உன் சாதி புத்தி. உனக்கு கொள்கையும் ஏறாது. கோட்பாடும் ஏறாது. குறைந்தபட்சம் சட்டம் படிச்சிருக்கியே.. சட்டமாவது பேச வேண்டாமா நீ? “சட்டப்படி யாரையும் கோயிலுக்குள் விடக்கூடாதுனு சொல்ல முடியாதுயா.. இந்த காலத்துல அதெல்லாம் நடக்காது. வந்தா வந்துட்டு போறான்னு” சொல்ல கூட அறிவு கிடையாது.

உனக்கு தீட்டு தெரியவில்லையா?
உச்ச நீதிமன்றம் போனாலும் விட மாட்டோம்னு சொன்னியே.. இப்ப கோயிலை பூட்டிட்டானே. இப்ப என்ன பண்ணுவ? பூட்ட பிடிச்சு ஆட்டப் போறியா? இப்படிப்பட்ட அறிவீனர்கள்தான் ஓபிசி மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். அறியாமையில் உழலக் கூடிய தற்குறிகள். சொந்த சமூக மக்களையே ஏமாற்றக்கூடிய மோசடி பேர்வழிகள். உன் வீட்டுக்கு உணவுப்பொருட்களை மூட்டையில் தூக்கி வருகிறானே.. அவன் தாழ்த்தப்பட்டவன்தானே. அது உனக்கு தீட்டாக தெரியவில்லையா? நீ சாப்பிடும் அரிசியை குத்திக்கொடுப்பவர்கள் இந்த சமூகத்து பெண்கள்தானே.. அப்போ உன் தீட்டு எங்க போச்சு? அதெல்லாம் அவங்களுக்கு தீட்டு தெரியாது.

தீட்டு தெரிவது எப்போது?
பட்டியலின மக்கள் கோயில் கோபுரத்தில் ஏறி வேலை செய்யும் போது அவங்களுக்கு தீட்டு தெரியாது. அவன் கும்பிடும் தெய்வங்களை செய்வதே பறையர்கள்தான். அதெல்லாம் அவனுக்கு தீட்டாக தெரியாது. நீ உண்மையை கேட்கும் போதும், அதிகாரத்தை அடைய முயலும் போதுதான் அவங்களுக்கு தீட்டு தெரியும். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.