திட்டமிட்டபடி அணுஆயுதங்களின் முதல் டெலிவரி வெற்றிகரமாக பெலாரசுக்கு மாற்றம் – ரஷ்ய அதிபர் புதின்

பெலாரசில் திட்டமிட்டபடி அணு ஆயுதங்களின் முதல் டெலிவரியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா முதன்முறையாக அணு ஆயுதங்களை அண்டை நட்பு நாடானபெலாரசுக்கு மாற்ற திட்டமிட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அது அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேசிய புதின், முதல் பாகம் முடிந்து விட்டதாகவும், கோடைக்காலத்தின் இறுதிக்குள் முழுமையாக அணு ஆயுதங்களை இடம் மாற்றும் பணி நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு ஆபத்து ஏற்பட்டால் ஒழிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் புதின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.