ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பிரதமர் மோடியுடன் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டோ எடுத்தும் ஆட்டோகிராஃப் வாங்கியும் கொண்டாடினர்.
பிரதமர் மோடிபிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து நாட்டிற்கு 5 நாட்கள் அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 21 ஆம் தேதி நியூயார்க் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பிய இந்திய வம்சாவளியினர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியப்படி அவரை வரவேற்றனர்.
திருப்பதி பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி… 3 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்!பெருமைஅமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது 140 கோடிமக்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது? அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!சிரித்த எம்பிக்கள்இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்ற பிரதமர் மோடி, நாம் இணைந்து இந்த உலகிற்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுப்போம் என்றும் எதிர்காலத்திற்கு சிறந்த உலகை கொடுப்போம் என்றும் கூறினார். மேலும் இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன என்றார் பிரதமர் மோடி. இதனைக் கேட்ட அவை உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.
சாந்தனு மனைவியா இது… மாடர்ன் லுக்கில் மிரட்டும் கிகி.. தீயாய் இருக்கும் போட்டோஸ்!எங்களின் குரல் ஒன்றுபிரதமர் மோடியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்து விட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் 20 வேறுபட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்களை ஆட்சி செய்கின்றன என்றும், இந்தியாவில் 22 அரசு மொழிகள் உள்ளன என்றும் கூறினார். ஆனால் அனைவரும் தேச பற்று என்பதில் ஒரே குரலில் பேசி வருகிறோம் என்றும் கூறினார் பிரதமர் மோடி. திருப்பதி கூட்ட நெரிசலில் இனி தவிக்க வேண்டாம்… பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
வித்தியாசமான உணவுகள்மேலும் ஒவ்வொரு 100 மைல் தொலைவிற்கும் தங்களின் உணவு முறை மாறுகிறது என்றும் எங்கு சென்றாலும் தோசை, ஆலுபுரோட்டா, சிக்கன், என அனைவரும் அனைத்தையும் ருசித்து வருகின்றனர் என்றும் கூறிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா என்று பெருமையாக பேசினார். AI குறித்தும் பேசி வியப்பை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி.
சந்தன பேழைக்குள் இருந்த ரகசியம்… ஜோ பைடனுக்கு மோடி வழங்கிய பரிசு… இப்படி ஒரு காரணமா!இன்னொரு AIஅதாவது, Artificial intelligence ஐ தவிர மற்றொரு முக்கிய AI யும் உள்ளது. அது அமெரிக்கா – இந்தியா ரிலேஷன்ஷிப்தான் என்றார் மோடி. பிரதமர் மோடி பேசிய போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 முறைக்கு மேல் கைத்தட்டினர். மேலும் பலமுறை எழுந்து நின்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்ககள் கைகளை தட்டினர்.மோடியுடன் செல்பிதொடர்ந்து அமெரிக்க எம்பிக்கள் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டனர். மேலும் அவரிடம் ஆட்டோகிராஃபும் பெற்றுக்கொண்டனர். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியின் உரை, அமெரிக்க அதிபர் மற்றும் எம்பிக்கள் மோடியிடம் காட்டிய மரியாதை ஆகியவை முன்பை விடவும் தற்போது அதிகமாகியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.