திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த திங்ககிழமையன்று பாரம்பர்ய உடையணிந்து ‘தேர்தல் திருவிழா’ என்கிற பெயரில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பொங்கல் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதே போல நேற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் ‘மோட்டர் வாகன பேரணி’யை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் எஸ்பி.பிரதீப்
மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் எஸ்பி.பிரதீப்

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் பல அரசு அலுவலர்கள், 150க்கும் இளைஞர்களும் மோட்டர் வாகன பேரணியில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக, ‘என்னுடைய வாக்கைக் கண்டிப்பாகச் செலுத்துவேன்; அதேபோல மக்களையும் வாக்கு செலுத்துமாறு வலியுறுத்துவேன்’ என உறுதிமொழி எடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.