5 கோடீஸ்வரர்களை பலி கொண்ட டைட்டன் கப்பல்.. உலகை உலுக்கிய மர்மம் அவிழ போகிறது

வாஷிங்டன், ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது. வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் … Read more

“போலீஸ் விசாரணை என்ற பெயரில் ஏற்படும் இறப்புகளுக்கு என்றுதான் முடிவுகாட்டுமோ திமுக..?" – இபிஎஸ்

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரும், சிறிய நகைக்கடை நடத்தி வந்தவருமான ராஜசேகரனை, திருட்டு நகைகளை வாங்கியதாகச் சந்தேகத்தின் பேரில் கடந்த 22-ம் தேதி திருச்சி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கூடவே அவரின் மனைவியையும் போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் ராஜசேகரனிடம், பெண் சப்-இன்ஸ்பெக்டர் உமா சங்கரி கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ராஜசேகரன் இதனால் எந்த தவறும் செய்யாததற்கு இப்படி செய்கிறார்களே என்று மனஉளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன், கடந்த 25-ம் தேதியன்று ரயில் … Read more

சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

சென்னை: சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய காவல் துறை தலைவராக (DGP) நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தமிழக காவல் துறையின் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > தமிழகத்தின் புதிய … Read more

திரிபுரா தேர் விபத்து | மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் மாணிக் சாஹா உத்தரவு

உனகோட்டி: திரிபுராவில் புதன்கிழமை தேரில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட விபத்து குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார். திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராம ஜெகந்நாதர் கோயிலில் கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் … Read more

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்!

தமிழக காவல்துறையின் டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்தது. காவல்துறையில் உள்ள பல்வேறு உயர் அதிகாரிகளின் பெயர்கள் அடுத்த டிஜிபிக்கான ரேஸில் அடிப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலதம் அல்மோராவை சேர்ந்தவர். இவர் உளவுப்பிரிவு … Read more

எதிர்கட்சிகளின் கூட்டம் திடீர் மாற்றம்: சரத் பவார் அறிவிப்பு – என்ன காரணம்?

பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரண்டு முதல் கூட்டம் பாட்னாவில் நடத்தப்பட்ட நிலையில் இரண்டாவது கூட்டத்துக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர்: அரசு இயந்திரம் வேகமெடுக்குமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன? ஒவ்வொரு கட்சிக்கும் மற்ற கட்சிகளுடன் முரண்கள் இருந்தாலும் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் … Read more

இடத்தை மாற்றிய எதிர்கட்சிகள்… சிம்லாவில் கூட்டத்தை கலைத்தது ஏன் – முழு விவரம்!

Opposition Parties Second Meeting: எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெற இருந்த நிலையில், தற்போது பெங்களூருவில் மாற்றப்பட்டதன் பின்னணியை இதில் காணலாம். 

திமுக பண்ணுலாம் தப்பு தப்பு தான்… டக்குனு சீமான் டயலாக்கை பேசிய உதயநிதி!

Maamannan: மாமன்னன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலில் பங்கேற்ற அப்படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பேசியதை இதில் காணலாம். 

சங்கர் ஜிவால் புதிய டிஜிபியாக நியமனம்… சென்னை கமிஷனர் யார் தெரியுமா?

Tamilnadu New DGP: தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு நாளை (ஜூன் 30) ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். 

IVPL 2023: பிடித்த கிரிக்கெட்டர்களை மீண்டும் களத்தில் பார்க்க வாய்ப்பு கொடுக்கும் ஐவிபிஎல்

இந்தியன் வெட்டரன் பிரீமியர் லீக் டெஹ்ராடூனில் நடைபெற உள்ளது, பழம்பெரும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள் ஜே.பி. டுமினி, லான்ஸ் க்ளூசனர், சனத் ஜெயசூர்யா, ரொமேஷ் கலுவிதர்னா, பிரவீன் குமார் போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் இந்த லீக்கில் விளையாடுவார்கள். முதல் இந்தியன் வெட்டரன் பிரீமியர் லீக் (IVPL) இந்த ஆண்டு நவம்பர் 17ம் நாளன்று தொடங்க உள்ளது. மூத்த கிரிக்கெட் வீரர்களான வீரேந்திர சேவாக், சனத் ஜெயசூர்யா, கிறிஸ் கெய்ல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இதில் … Read more