ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

காய்கறிகளை ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. விலைவாசி உயர்வால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஏற்கனவே அனைத்து விலைவாசிகளின் உயர்வால் அன்றாட … Read more

மாமன்னன் படத்தின் வெற்றிக்கு மாரி செல்வராஜ்க்கு கார் பரிசளித்த உதயநிதி!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு திரையரங்குகளில் வெளிவந்த இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறி வருகிறது என்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் உதயநிதி, மாரி … Read more

Vijay 68 – விஜய் 68 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?.. ஐந்து வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகிறதா?

சென்னை: Vijay 68 (விஜய் 68) விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கப்போகும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தைத் தொடர்ந்து லியோவில் அவர் நடித்துவருவதால் இந்தப் படம் கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களும் ஹிட்டாகியிருப்பதால் லியோவும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே … Read more

சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்…3 பேர் கைது

கவுகாத்தி, அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார்த்த சாரதி மஹந்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் கூடுதல் எஸ்.பி. கல்யாண் பதக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுகாத்தியில் இருந்து துப்ரி நோக்கி ஒரு எஸ்யுவி ரக கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதித்தனர். அதனுள் ஏராளமான சோப்பு டப்பாக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் … Read more

ஷாரூக் கான், சுரேஷ் குமார் அதிரடி; மதுரைக்கு எதிராக கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு..!

சென்னை, டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு பிளே ஆப் இடத்துக்கு மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் போராடி வருகின்றன. பால்சி திருச்சி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. … Read more

''இந்திய மீனவர்களால் கடல் வளங்கள் அழிகின்றன'' – இலங்கை மந்திரி பரபரப்பு கருத்து

கொழும்பு, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் கடல் வளங்கள் அழிவடைவதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற பொருளில் அதிபர் ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி ஏற்படும் என நம்புவதாக குறிப்பிட்டார். தினத்தந்தி Related Tags : … Read more

Monaco Energy Boat Challenge: "முதல்வர் தந்த 15 லட்சம்!" – படகுடன் மொனாக்கோ செல்லும் கோவை மாணவர்கள்

கோயம்புத்தூர் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் பத்து மாணவர்கள், இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஐரோப்பாவின் மொனாக்கோவில் நடக்கவுள்ள `மொனாக்கோ ஆற்றல் படகுப் போட்டி’யில் (Monaco Energy Boat Challenge) ‘Team Sea Sakthi’ என்ற பெயரில் பங்கேற்கவுள்ளனர். தங்களின் படகுக்கு `யாழி’ என்றும் தமிழில் பெயர் வைத்துள்ளனர். மொனாக்கோவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களுடன் போட்டிப் போட்டு, இவர்கள் வடிவமைத்த படகைக் காட்சிப்படுத்தி இயக்க வேண்டும்.  Team Sea Sakthi இக்குழுவைச் … Read more

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது: முத்தரசன் பேட்டி

காட்பாடி: மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி பாகுபடின்றி தமிழ்நாடே எதிர்த்து நிற்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட கோரிக்கை மாநாடு காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் லதா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் … Read more

மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்: என்சிபி எம்எல்ஏ.,க்கள் பலரும் கட்சித் தாவல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பலரும் ஆளும் சிவசேனா (ஷிண்டே பிரிவு) – பாஜக கூட்டணியில் இணைந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏக்களில் 40-க்கும் மேற்பட்டோர் அஜித் பவார் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அஜித் பவார் மற்றும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் அமைச்சரகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய … Read more

கோவை ஷர்மிளாவுக்கு கமல் கொடுத்த ரூ.16 லட்சம் கார்.. புக்கிங் முடிந்தது.. அடுத்த ஐடியா இதுதான்!

கோவை: கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்து பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இளம்பெண் ஷர்மிளாவுக்கு கமல் பரிசளித்த ரூ.16 லட்சம் மதிப்பிலான காரின் புக்கிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து, ஓரிரு தினங்களில் ஷர்மிளா அந்தக் காரில் சீறிப்பாய தயாராகி வருகிறார். கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பெண் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ஷர்மிளா. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் இப்பணியில் சேர்ந்தார். ஆனால் அதற்குள்ளாக அவரது வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மானாவாரியாக பரவியால் புகழின் … Read more