தொழில், வணிக நிறுவன மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவு

சென்னை: தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியம் தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில் மற்றும் வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. 61 ஆயிரம் இணைப்புகள்: தற்போது தொழில் மற்றும் வணிகப் பிரிவில் 61 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. இவற்றில் மாதம்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கச் … Read more

நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 உடனடி குறைப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, நாடு முழுவதும் … Read more

சீன புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம்: உண்மை நிலையை மாற்ற முடியாது என இந்தியா கண்டனம்

பெய்ஜிங்: சீனா வெளியிட்டுள்ள புதிய வரை படத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய … Read more

ஆல் அவுட் குடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு.. தொடும் தூரத்தில் கொடும் விஷம்.. பெற்றோர்களே உஷார்

சென்னை: கொசுவை விரட்டுவதற்காக பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஆல் அவுட் திரவத்தை குடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. அதே சமயத்தில், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் தான், குழந்தைகள் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், கைக்கு எட்டும் பொருட்களை எடுத்து வாயில் போடவும் முயற்சிக்கும். இந்த … Read more

Oppo A38 : 5000mAh பேட்டரி, 50MP கேமரா, டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் என அல்டிமேட் ஸ்பெக்ஸ்களின் முழு விவரங்கள்!

Oppo A38 மாடல் மொபைல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான Oppo A36 மொபைலின் தொடர்ச்சியாக வெளியாக உள்ளது. இந்நிலையில், அதன் அதிகாரபூர்வ வெளியீடு குறித்து ஓப்போ எந்த தேதியையும் அறிவிக்கவில்லை. ஆனால், பல்வேறு சான்றிதழ் தளங்களில் இந்த மொபைல் பட்டியலிடப்பட்டுள்ளது. அதை வைத்து டிப்ஸ்டர்கள் பலரும் Oppo A38 – ல் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் டிசைன் குறித்த படங்கள் ஆகியவற்றை பகிர்ந்துள்ளனர். ​Oppo A38 டிசைன்PC : Slashleaksடிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி … Read more

மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு : இருவர் மரணம் – 7 பேர் படுகாயம்

இம்பால் மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து  இதனால்  அங்கு கடும் வன்முறை ஏற்பட்டது.  இதனால் அங்குள்ள மக்கள் மட்டுமின்றி நாடே கடும் பீதியில் ஆழ்ந்தது. மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் … Read more

68வது படத்தில் அப்பா – மகனாக நடிக்கும் விஜய்

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா, மாதவன், ஜெய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அப்பா – மகன் … Read more

விடுவிக்கப்பட்டார் இம்ரான் கான்: மூன்றாண்டு சிறை தண்டனை ரத்து| Imran Khan freed, three-year prison sentence cancelled

இஸ்லாமாபாத்: டோஷாகானா ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று உத்தரவிட்டது. பரிசுப் பொருட்கள் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான், அந்நாட்டின் பிரதமராக 2018 – 22 வரை பதவி வகித்தார். பாக்., பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு, வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுகளை … Read more