நிவாரண முகாமில் இருப்பவர்களுக்கு ரூ.10 கோடியில் அத்தியாவசிய பொருட்கள்: மணிப்பூர் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில், ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்குமாறு மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களதுஉயிர், உடமைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலை காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண … Read more