கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது நடைமுறையில் விதிமீறல்' என அவர் தரப்பில் வாதம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழகம் ஊழல் வழக்கு பதிவுசெய்தது. மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்குச் சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று, அதிகாலை 3 மணிக்குக் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைதுசெய்யக் கைது வாரன்ட்டை அவருக்கு அளித்தாலும், சந்திரபாபு நாயுடு எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பதால், அவரை காலை 6 மணி வரை கைதுசெய்ய அனுமதிக்க முடியாது … Read more

மதுரை | தொகுதி மக்களிடம் கடந்த 6 மாதத்துக்கான செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

மதுரை: தொகுதி மக்களிடம் கடந்த 6 மாதங்களுக்கான செயல்பாட்டு அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். தான் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களை வீடு, வீடாக சந்தித்து கடந்த 6 மாத காலத்துக்கான தனது செயல்பாட்டு அறிக்கையை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இன்று முதற்கட்டமாக மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்துக்கான தமது செயல்பாட்டு … Read more

பிரதமர் மோடி முன்பு பாரத் பெயர் பலகை

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்பு உள்ள பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என இடம்பெற்றுள்ளது. ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார். சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் தலைவர்களின் இருக்கை முன்பு சம்பந்தப்பட்டவரின் நாட்டின் பெயர் … Read more

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்…!

ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க இருக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

INDvsPAK: கேஎல் ராகுல் ரிட்டன்ஸ், உட்கார வைக்கப்பட்ட ஐயர்

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி கொழும்புவில் இருக்கும் பரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் அதிக வெற்றிகளை பெற்றிருந்தாலும், இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்து பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை பிளேயிங் லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு … Read more

இன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

கொழும்பு இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன  போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன. இந்த சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் … Read more

உடலில் ஒட்டுத்துணி இல்லை.. இரவில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளம்பெண்! வெளியான ஷாக் தகவல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக சாலையில் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னை பலாத்காரம் செய்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்ததாக அவர் கூறிய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த விபரம் வருமாறு: அதாவது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா Source Link

சவுதி இளவரசர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த காரால் பரபரப்பு| US Presidents Convoy Car Enters UAE Crown Princes Hotel. Then This Happened

புதுடில்லி: அமெரிக்க அதிபரின் கான்வாயில் செல்ல தேர்வாகியிருந்த கார், திடீரென சவுதி பட்டத்து இளவரசர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜி20 மாநாடு டில்லியில் இரண்டு நாட்கள் நடந்தது. இதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்கள் டில்லி வந்துள்ளனர். முகமது பின் சல்மான், டில்லியின் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தார். ஜோ பைடன், ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்கியிருந்தார். மாநாட்டை முன்னிட்டு, டில்லியில் கடும் … Read more

இன்றுடன் 500 கோடியைக் கடக்குமா 'ஜவான்'

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதியன்று வெளியான படம் 'ஜவான்'. இப்படம் பற்றி இங்குள்ள சிலர் வேறு விதமாக விமர்சித்தாலும், ஹிந்தி சினிமா ரசிகர்கள் இப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளார்கள். முதல் நாள் வசூலாக 129 கோடியும், இரண்டாவது நாளில் 111 கோடியும் என இரண்டே நாட்களில் மொத்தமாக 240 கோடியை வசூலித்துள்ளது. விடுமறை தினமான நேற்றைய வசூலும் 100 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more