6-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…

சென்னை: 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. அதற்கான  தேதி மற்றும் விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் … Read more

லோகேஷ் கனகராஜுக்கு ஷாரூக்கான் கோரிக்கை

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியிருந்த ஜவான் திரைப்படம் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி முன்னணி வரிசைக்கு உயர்ந்த இயக்குனர் அட்லி, முதல் முறையாக பாலிவுட்டுக்கு சென்று அதுவும் அங்குள்ள முன்னணி ஹீரோவை வைத்து படம் இயக்கி இருப்பது இங்குள்ள ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள சக இயக்குனர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‛ஜவான்' பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் மிகப்பெரிய பிளாக் … Read more

விடை பெற்றார் மாரிமுத்து.. கொல்லி வைத்த மகன்.. கதறி அழுதபடி விடை கொடுத்த சொந்தங்கள்!

சென்னை: மாரடைப்பால் உயிரிழந்த மாரிமுத்து உடல், அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு இல்லத்தரசிகள் மனதிலும் இடம்பிடித்தார் மாரிமுத்து. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று போராடி கடந்த இரண்டு ஆண்டுகளான நல்ல கதாபாத்திரங்களில் நடித்து

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்

காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது – தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது … Read more

"ரசிகர்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்!"- டிக்கெட் விற்பனை சர்ச்சையை விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துவிட்டது. 2011க்குப் பிறகு கோப்பையை வென்று தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் சரித்திரம் படைக்குமா என்பதை பார்ப்பதற்கு  ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், போட்டிகளைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை புக் செய்வதில் ஏகப்பட்ட சிரமங்களை ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனே ‘Sold Out’ … Read more

கரும்பு சாகுபடி பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், தொடர்ந்து … Read more

ஜி20 உச்சி மாநாடு | இந்தியாவின் அணுகுமுறையும் அதன் பலன்களும் – முனைவர் எம்.வெங்கடாச்சலம் ஐஎப்எஸ்

புதுடெல்லி: புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்ட பாரத மண்டபத்தின் முதல் விருந்தினர் பெருமையை உலகப் பெருந்தலைவர்கள் பெற்றுள்ளனர். இன்று துவங்கியுள்ள ஜி20 என்பது, 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய பன்னாட்டு அமைப்பாகும். இதற்கென நிலைப்பட்ட செயலகமோ, தலைவரோ கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 உறுப்பினர்களில் ஒரு நாடு தலைமை ஏற்று பல செயல் திட்டங்களை தீர்மானித்து நடத்துகின்றன. ஆண்டுதோறும் வெறும் நிகழ்வாக கடந்து செல்லும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் இந்த ஆண்டு, ஒரு திருவிழாவாக … Read more

மொராக்கோவில் சக்திவாய்ந்த பூகம்பம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு; பலி எண்ணிக்கை 600-ஐ கடந்தது

ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. மொராக்கோவின் சுற்றுலா தலமான மாரகேஷ் பகுதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோ மீட்டர் … Read more

மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்

கலிபோர்னியா: அடுத்த ஆண்டு மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் நடத்தும் நிகழ்வில் ஆப்பிள் 15 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களை அந்நிறுவனம் செய்ய உள்ளது. உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், லேப்டாப் சந்தையிலும் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை … Read more