"சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை".. உதயநிதி மாஸ் பேச்சு

சென்னை: சனாதனத்தை ஒழிப்பதற்காக திமுக ஆட்சியே பறிபோனாலும் அதை பற்றி தனக்கு கவலையில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைபடத்தை காலில் மிதித்தும்,செருப்பால் அடித்தும், பா.ஜ.க மகளிர் அணி எதிர்ப்பு. ஒரே நாள் இரவில் இந்தியா முழுவதும் உள்ள அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் உதயநிதி … Read more

ஐரோப்பா, மத்திய கிழக்கை இந்தியாவுடன் இணைக்க மாஸ் பிளான்.. ரெடியாகும் ரயில்வே – கப்பல் போக்குவரத்து!

இந்தியா முதல் முறையாக ஜி20 உச்சி மாநாட்டை நடத்துகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, அர்ஜென்டினா, வங்கதேசம், கனடா, ரஷ்யா, மொரிஷியஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவியும் கைக்குலுக்கியும் வரவேற்றார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தனது வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய … Read more

Rajinikanth : அவர் உருவம் பாரு எளிமை.. அந்த எளிமை தானே அவருக்கு வலிமை..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் பெரிய வெற்றிப்படமாக ஆனது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அவரது எளிமையாய் அவர் என்றுமே விட்டதில்லை. வெளியே எதாவது நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்றால் மிகவும் எளிமையாக தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அல்லது குர்தா போன்ற உடைகளையே அணிவார் சூப்பர்ஸ்டார். பேருந்து நிலையம் சென்ற ரஜினி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பின்னர் சினிமாவில் நுழைந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு … Read more

Samsung Galaxy S24 Ultra மொபைலில் Snapdragon 8 Gen 3 ப்ராசஸர் வரப்போதாம்! டிப்ஸ்டர் வெளியிட்ட எக்ஸ்க்ளூசிவ் லீக்ஸ்!

Samsung S24 அல்ட்ரா அடுத்தாண்டு வெளியாக உள்ள நிலையில் அது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் தனது சமூக வலைதள பக்கத்தில் Samsung s24 Ultra – ல் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை கசிய விட்டுள்ளார். Samsung Galaxy s24 ultra ஸ்டோரேஜ், டிஸ்பிளே, ப்ராசஸர் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அவரது லேட்டஸ்ட் தகவல்களின்படி, Samsung s24 Ultra – ல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து … Read more

ஜனநாயகம் இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும் -ப.சிதம்பரம் கடும் கண்டனம்

P Chidambaram Angry With BJP: ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட்.

சந்திரமுகி-2 ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..! காரணம் தெரியுமா..?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?   

’அவரு ஒரு மன நோயாளி’ கொடநாடு கொலை வழக்கில் புதிய குற்றச்சாட்டு

கொடநாடு கொலை மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜ் அண்ணன் தனபால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சேலம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   

ஆசிய கோப்பை 2023-ல் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய 6 சர்ச்சைகள்

ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. ஆசிய கோப்பையின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இப்போது சூப்பர்-4 சுற்றில், 4 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத இருக்கின்றன. இதற்குள்ளாகவே ஆசிய கோப்பை தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இருந்து எழும் சர்ச்சைக்களுக்கு ஒரு என்டு கார்டே இல்லை என்ற அளவுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னென்ன சர்ச்சைகள் என்று இங்கே பார்க்கலாம்.  பாகிஸ்தானில் இருந்து மாற்றம் ஆசிய … Read more

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்ன:  சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள   பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம், இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று  நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் கலந்துகொள்ளாத நிலையில், ஏராளமான மகளிர் அணியினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, … Read more

சர்வ நாசமான மொராக்கோ.. 600 தாண்டிய பலி.. பூகம்பத்திற்கு என்ன காரணம்! இந்தியா பாதுகாப்பாக உள்ளதா

ரபாத்: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இந்த நிலநடுக்கத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு மொரோக்கோ.. அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 3.7 கோடிதான். இந்த நாட்டில் தான் இப்போது மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. Source Link