“தொற்று இருப்பதை ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி…” – சனாதான சர்ச்சையில் பி.எல்.சந்தோஷுக்கு பிரியங்க் கார்கே பதில்
புதுடெல்லி: “இங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல தொற்றுகள் இருந்திருக்கின்றன. இன்றும் பரவலாக இருக்கின்றன. அவை மனிதர்களுக்கிடையே பாகுபாட்டினை உருவாக்கி, மனிதருக்குரிய கண்ணியத்தை மறுக்கிறது” என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். சனதான சர்ச்சை குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதனம் என்பது கொசு, டெங்கு, ஃபுளூ, மலேரியா போன்ற நோய். அதை எதிர்க்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும்’’ எனப் பேசியிருந்தார். சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்துக்கு வலதுசாரி அமைப்புகளும், … Read more