அகமதாபாத் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டத்துக்கு ரசிகர்கள் குறைந்த அளவில் வந்துள்ளனர். இந்தியாவில் இன்று முதல் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்றைய போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. தொடக்க நாளான/ இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாள் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. அகமதாபாத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய நரேந்திர மோடி […]