என்னை விட்டுருங்க: ஹமாஸ் வெளியிட்ட வீடியோவில் இஸ்ரேல் பெண் கெஞ்சல்| Israel Hamas War: Israeli woman pleads in video released by Hamas

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெருசலேம்: ஹமாஸ் தீவிரவாத குழுவினர் முதல் முறையாக இஸ்ரேல் பெண் பிணைக் கைதி ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், சீக்கிரமாக என்னை இங்கிருந்து விடுவியுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாத குழுவினர் முதல் முறையாக இஸ்ரேல் பெண் பிணைக் கைதி ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் இஸ்ரேல் பெண் பேசியதாவது: நான் ஷோஹமைச் சேர்ந்த மியா ஷெம். நான் இப்போது காசாவில் இருக்கிறேன்.

இங்குள்ளவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள், மருந்துகள் வழங்குகிறார்கள், எல்லாம் நலமாகவே இருக்கிறது. நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான் நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை என் பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள். சீக்கிரமாக என்னை இங்கிருந்து விடுவியுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இஸ்ரேல் பதிலடி

இந்த வீடியோ குறித்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியிருப்பதைாவது: ஹமாஸ் தனது வீடியோவில் தன்னை ஒரு மனிதாபிமான குழுவாக அடையாளப்படுத்த முயற்சித்துள்ளது. இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக் கைதிகள் அனைவரும் விருந்தினர்களாக நடத்தப்படுவார்கள்.

ஹமாஸ் ஒரு மோசமான தீவிரவாத அமைப்பு. இஸ்ரேலின் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள்,வயதானவர்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களைக் கடத்தியது, கொலை செய்ததற்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.