01 கிலோவுக்கும் அதிகமான TNT உயர் வெடிபொருட்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில் இன்று (2023 ஒக்டோபர் 17) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு (01) கிலோகிராம் TNT உயர் வெடிமருந்துடன் மூன்று (03) அடி நான்கு (04) அங்குலங்கள் கொண்ட பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தின் கடற்படையினர் இன்று (17 அக்டோபர் 2023) யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதிக்கு அருகிலுள்ள புதருக்குள் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று ஆய்வு செய்தனர். அந்த பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ (01) தொள்ளாயிரத்து ஐம்பது (950) கிராம் TNT உயர் வெடிமருந்துகள் மற்றும் சுமார் மூன்று (03) அடி நான்கு (04) அங்குலங்கள் கொண்ட பாதுகாப்பு உருகிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதுடன் வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.