நான் ஒருபோதும் விராட் கோலியை ஸ்லெட்ஜ் செய்யவில்லை, ஏனெனில்…. – முஷ்பிகுர் ரஹீம் அளித்த பதில்

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை புனேவில் சந்திக்க உள்ளது.

இந்திய அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நான் ஒருபோதும் விராட் கோலியை ஸ்லெட்ஜ் செய்யவில்லை, ஏனெனில் ஸ்லெட்ஜ் செய்வதால் அவர் சிறப்பாக செயல்பட உந்தப்படுகிறார் என வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உலகில் உள்ள சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புகிறார்கள், அதனால் உற்சாகமடைகிறார்கள். அதனால் நான் அவரை (விராட் கோலி) ஒருபோதும் ஸ்லெட்ஜ் செய்யவில்லை, ஏனென்றால் அவர் அதைக் கண்டு உந்தப்படுவார். நான் எப்போதும் எனது பந்துவீச்சாளர்களிடம் அவரை முடிந்தவரை விரைவாக வெளியேற்றும்படி கூறுவேன்.

ஆனால், நான் அவருக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், அவர் எப்போதுமே நான் பேட்டிங் செய்யச் செல்லும் ஒவ்வொரு முறையும் என்னை ஸ்லெட்ஜ் செய்ய முயற்சிக்கிறார். ஏனெனில், அவர் மிகவும் போட்டித்தன்மையுள்ள வீரர்.

அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியடைய விரும்பவில்லை. அவருடனான போட்டியையும், இந்தியாவை எதிர்கொள்வதில் வரும் சவாலையும் நான் மிகவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.