டெல்லி: மாநிலங்களவையில் சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சதா, ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதாவை ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்து, மக்களவையில் நடந்த குற்றச்சாட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆம் ஆத்மியை சேர்ந்தவர் ராகவ் சத்தா, இவர் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரின்போது, டில்லி நிர்வாக […]