`நொறுக்கு தீனிக்காக கோடி கணக்கில் செலவு செய்யும் இந்தியர்கள்'! – ஆய்வுத் தகவல்!

`இந்த பொழப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைத்தது’ எனப் பலரும் உடல் ஆரோக்கியத்தைக் கருதாமல் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை (junk food) அளவுக்கு அதிகமாக உண்ணுகிறார்கள். 

சிலர் நொறுக்கு தீனியை மெயின் உணவாகவும், அத்தியாவசிய உணவை சைடிஷ் போலவும் எடுத்துக் கொள்வதும் உண்டு. இந்த நிலையில் இந்தியர்கள் நொறுக்குத் தீனிகளுக்கு பில்லியன் கணக்கில் செலவு செய்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. 

 `Access To Nutrition Initiative’ (ATNI) அமைப்பு குறிப்பிட்ட அறிக்கையில், “துரித உணவுகளை உண்ணும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து உள்ளது.

2011 முதல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra processed food) எடுத்துக் கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. என்னதான் கோவிட் தொற்று சமயத்தில் பதப்படுத்த உணவுகளின் விற்பனை ரீடெய்ல் மார்க்கெட்டில் குறைந்தாலும், தொற்று பாதிப்புக்கு பின்னர் மீண்டது.

அதிகரித்துள்ள அத்தியாவசிய உணவுகளின் 106 சதவிகிதம் அளவு வளர்ச்சி விகிதம் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விகிதத்தோடு ஒத்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மதிப்பு உயரும். இந்த உணவுகளின் பொருளாதாரம் 6 சதவிகிதம் வளர்ச்சியை எட்டும் என்று நம்பப்படுகிறது. 

சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை மிட்டாய்கள், பானங்கள், உப்பு தின்பண்டங்கள், ரெடிமேட் உணவுகள் மற்றும் காலை உணவு தானியங்கள் ஆகிய உணவுகள் பரிசீலனையில் உள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் இந்த ஐந்து வகைகளில் நான்கு, ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கும் அதிகமான விற்பனையில் இருக்கும். சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை மிட்டாய்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படி பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளை உண்பதால் அதற்கான விளைவுகளையும் செலவுகளையும் மக்கள் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவதோடு உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது.

உடல்பருமன்

இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 23 சதவிகிதத்தினர் உடல்பருமன் அதிகமுடையவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2023 அறிக்கையின்படி, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் காரணமாக ஏற்படும் நோய்களால் தொழிலாளர் உற்பத்தித்திறனில்  நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது.

154 நாடுகளில் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் தொடர்பான இழப்புகளின் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா 668.9 பில்லியன் டாலர்களை ஆரோக்கியமற்ற உணவு முறைகள் தொடர்பான இழப்புகளுக்குச் செலவு செய்கிறது. அமெரிக்கா 1,340 டாலர்களையும், சீனா 2,051.7 டாலர்களையும் செலவு செய்கிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.