உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!
கொல்கத்தா, இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 9 ஆட்டங்களில் ஆடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளது. … Read more