நடைப்பயிற்சி சென்ற நபருக்கு திடீர் மாரடைப்பு – உயிரை காப்பாற்றிய‛ஸ்மார்ட் வாட்ச்' எப்படி?

லண்டன், தற்போது அனைவரும் ஸ்மார்ட் வாட்ச்சுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளோம். இந்த ஸ்மார்ட் வாட்ச் என்பது நேரம் பார்ப்பதற்கு மட்டுமின்றி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து அலார்ட் செய்யும் உயிர் காக்கும் வாட்ச்சாகவும் செயல்பட்டு வருகிறது. அதாவது ஆப்பிள் உள்ளிட்ட பிற விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளை நாம் அணியும்போது இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றம், உடலில் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் ஸ்மார்ட் வாட்ச் நம்மை அலர்ட் … Read more

2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு பட்டியல்

சென்னை: வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் “விளக்கம்” என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட … Read more

இந்தியா – அமெரிக்கா இடையே 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறையில் உறவை வலுப்படுத்தும் நோக்கில் 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இதில், இந்திய தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க தரப்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் … Read more

சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது 

சென்னை சென்னை உயர்நீதிமன்றம்  பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பனையூரில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அமர்  … Read more

இளையராஜா வாழ்க்கை வரலாற்றில் தனுஷ்.. உறுதி செய்த நிறுவனம்!

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன் பிறகு இது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது. இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என … Read more

குடும்ப மானமே போச்சு.. அவ உங்களுக்கு வேண்டாம்.. ஐஷு தாயாரின் சோகப்பதிவு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஷு நிக்சனுடன் நெருக்கமாக பழகி வருவதால், அவரது தாயார் உருக்கமாக  பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் மணிசந்திராவும், ரவீணாவின் காதலை தாண்டி  ஐஷு நிக்சனும் ஓவராக நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மிக்சர் பார்ட்டி கூட  இருக்கட்டும்

வட மாநில தொழிலாளர் விவகாரம்: பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரைச் சேர்ந்த யூடியூபர் மனிஷ்காஷ்யப். இவர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் தமிழகம், பிஹாரில் பதற்றமான சூழல் உருவானது. பிஹார் அதிகாரிகள் தமிழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மனிஷ் … Read more

“முதலில் பதவி நீக்கம், பின்னர்…” – மக்களவை நெறிமுறைக் குழு அறிக்கையை சாடிய மஹுவா மொய்த்ரா

புதுடெல்லி: மக்களவை நெறிமுறைக் குழுவால் நெறிமுறையற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முதல் நபர் என்ற முறையில் பெருமையடைவதாக எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு வியாழக்கிழமை பரிந்துரைத்த நிலையில், இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக நெறிமுறைகளற்ற முறையில், மக்களவை நெறிமுறைக் குழுவால் வெளியேற்றப்பபடும் முதல் நபர் நான் என்பதில் … Read more

டி டி பொதிகை தொலைக்காட்சி பெயர் மாற்றம்

சென்னை விரைவில் டி டி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றப்பட உள்ளதாக மத்திய அமைசர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அமைச்சர் செய்தியாளர்களிடம், அனைவரும் முன்பு டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். என்வே தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் … Read more