Bigg Boss Tamil 7: அங்க என்ன பாஸ் நடக்குது.. ஒரே பாத்ரூமுக்குள் ஒன்றாக சென்ற மாயா – ஐஷு.. கொடுமை!

சென்னை: கடந்த வாரம் பெண்களுக்கு பிக் பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என மாயா, ஐஷு, ஜோவிகா, ரவீனா தாஹா மற்றும் பூர்ணிமா ரவி உரிமைக் குரல் எழுப்ப பெண்களின் பாதுகாவலன் தோ வந்துட்டேன் என கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஓடாத பிக் பாஸ் நிகழ்ச்சியை அந்த

`சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை, அதனால்தான்..!' – கோயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் `பகீர்'

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச் சத்தம் கேட்டது. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சிசிடிவி கேமரா … Read more

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 10% போனஸ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வேளாண்மை – உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை … Read more

“வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பதில் என்ன தவறு?” – காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி கேள்வி

புதுடெல்லி: “வாரத்துக்கு 70 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதில் என்ன தவறு உள்ளது?” என காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார். “இந்தியா வேகமாக முன்னேற வேண்டுமானால் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும்” என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சில தினங்களுக்கு முன் கூறி இருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து … Read more

“சரியான திசையில் வைக்கப்பட்ட முதல் அடி” – தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா பாராட்டு

வாஷிங்டன்: ஹமாஸுக்கு எதிரான போரில் தினமும் 4 மணி நேரம் இடைவெளி விடுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா அதனை வரவேற்றுள்ளது. காசாவுக்கு வழங்கி வந்த மின்சாரம், எரிபொருள், குடிநீர் ஆகியவற்றை இஸ்ரேல் நிறுத்தி உள்ளது. இதனால், காசாவில் உள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிப்பதிலும் நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படுகிறது. காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் தாக்குதலுக்கு இலக்காவதால், அவர்கள் அங்கிருந்து வெளியே செல்வதற்கு நேரம் கொடுக்கப்பட வேண்டும் என பலரும் … Read more

ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

Japan Vs. Jigarthanda DoubleX Review: இந்த வருட தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ஜப்பான் படமும் வெளியாகியுள்ளன. இதில் எதை முதலில் பார்க்கலாம்? இங்கு பார்ப்போம் வாங்க. 

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் – வாசிம் அக்ரம் கொடுத்த பலே பிளான்..!

உலக கோப்பை 2023 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதும் நிலையில் இந்திய அணியுடன் மோதும் மற்றொரு அணி மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. இப்போதைய சூழலில் 99.99 விழுக்காடு நியூசிலாந்து அணி மும்பையில் இந்திய அணியை அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும். ஆனால், பாகிஸ்தான் அணிக்கு மையிரிலையில் ஒரு  வாய்ப்பு உள்ளது. அது நடக்காது என்றாலும், அப்படியொரு வாய்ப்பு இருப்பதை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் … Read more

STR 48 Exclusive : "ரஜினி சாருக்கு சொன்ன கதை; கமல் சார் சொன்ன கமென்ட்" – தேசிங்கு பெரியசாமி

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்தவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் பாராட்டினார். அவரின் தீவிர ரசிகனான தேசிங்கிற்கு அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கப்போகிறது ? இதனைத் தாண்டி, அவரை இயக்கவும் வாய்ப்பு கிடைத்து, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், சில பல காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தேசிங்கு பெரியசாமி யாரை இயக்குவர் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் இருந்த சூழலில், சிம்புவை இயக்கவிருக்கிறார், அதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது … Read more

நாசா ஓடிடி… கட்டணமில்லை – வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை தொடக்கம்..! எப்படி பார்ப்பது?

ஓடிடியில் நாசா இப்போதெல்லாம் ஓடிடி சேவைகள் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டன. கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஓடிடி தளங்களை பல்வேறு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இருப்பினும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவை உலகம் முழுவதும் இருக்கும் பிரபலமான ஓடிடி தளங்களாக இருக்கின்றன. இதனை தவிர அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப சின்ன சின்ன ஓடிடி சேவைகளும் உள்ளன. அந்தவகையில் இப்போது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் புதிய … Read more

2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவிப்பு… ஜனவரியில் 6 நாட்கள் விடுமுறை…

2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவிப்பு… ஜனவரியில் 6 நாட்கள் விடுமுறை… தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவிடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.