விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்

பெங்களூரு, ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியை சேர்ந்த 32 வயதான பெண் 6ஆம் தேதி பிராங்பெர்டில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்தார். விமானத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த முதியவர் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. முதியவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேறு இருக்கை ஒதுக்குமாறு கோரினார். பின்னர், விமானம் பெங்களூருவுக்கு வந்ததும், அந்த பெண் கெம்பேகவுடா சர்வதேச விமான … Read more

உலக கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு..!

பெங்களூரு, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.இதில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் … Read more

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக, இந்த தீபாவளி அமையட்டும் – கமலா ஹாரிஸ் வாழ்த்து

வாஷிங்டன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் ஆவர். விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், “இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்க்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான … Read more

தீபாவளி | கடன் தீர்க்கும் ஆகாச தீபம், மங்களம் அருளும் கார்த்திகை ஸ்நானம் | How to Worship Deepavali

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தீபாவளிக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். Source link

கோவை கனமழை – 30 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம்பட்டி ஏரிக்கு அதிக நீர்வரத்து

கோவை: கோவையில் பெய்த கனமழையால், 30 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை வடக்கு பகுதியில் உள்ள பிரதான நீர் ஆதாரமான சின்ன வேடம்பட்டி ஏரி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியானது நீரின்றி பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசின் நமக்கு நாமே திட்டம் மூலம் சுமார் ரூ.60 லட்சம் செலவில் ஏரி மற்றும் ராஜ வாய்க்கால் புனரமைப்பு பணிகள் தொடங்கின. மொத்த … Read more

கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு பிஹார் சட்டப்பேரவை ஒப்புதல்

பாட்னா: அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் தற்போதுள்ள 50 சதவீத ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா பிஹார் சட்டப்பேரவையில் நிறைவேறியது. பிஹார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். 1931-ம் ஆண்டுக்கு பிறகு பிஹாரில் தற்போதுதான் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை கடந்த அக்.2-ம் தேதிவெளியானது. இதில் பிஹார் மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 64 சதவீதம் பேர் … Read more

இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி இவர் காணிக்கையாக வழங்கியதாகும். ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஐயப்பனுக்கு செய்யப்படும் விசேஷ பூஜை சித்திரை ஆட்டத் திருநாள் ஆகும். … Read more

ஆடியோ புத்தகத்திற்கு இசை அமைக்கும் விஷால் சந்திரசேகர்

வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர். அப்புச்சி கிராமம், உரியடி, குற்றம் 23, சங்கிலி புங்கிலி கதவதிற, ரங்கூன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் இசை அமைத்த 'சித்தா' படத்தின் பின்னணி இசை பேசப்பட்டு வருகிறது. ஏராளமான தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். திரைப்படங்களுக்கு இசை அமைத்தாலும் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆடியோ புத்தகம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது … Read more