பணமதிப்பிழப்பு நடந்து 7 ஆண்டுகள் நிறைவு… கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி, பண மதிப்பிழப்பு நடந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் ஏன் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பண மதிப்பு நீக்கம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் தாக்கம் இன்று வரை இந்தியர்களுக்கு பெரும் காயத்தை உண்டாக்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 50 நாட்கள் போதும் என்று பிரதமர் … Read more

ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீரர்கள் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

துபாய், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இந்திய இளம் வீரர் … Read more

அமெரிக்காவில் அதிர்ச்சி; ஓட்ட பந்தயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு 14 வயது மாணவர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த மாணவன் நாக்ஸ் மேக்ஈவன் (வயது 14). டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த ஈவன், பயிற்சிக்காக ஓட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது வழக்கம். இதன்படி, 5 கி.மீ. ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் உடனடியாக சென்றுள்ளனர். எனினும், ஈவனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி … Read more

ஜோக்ஸ்: போராட்டத்துல பொழுதுபோக்கு அம்சம் குறைவா?

ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் Source link

கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய இபிஎஸ்ஸுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் … Read more

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வைக்கோல்களை எரிப்பதை உடனே நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வைக்கோல்கள் எரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியின் காற்று மாசு 400 முதல் 470 புள்ளிகளாக இருந்து வருகிறது. தலைநகரில் காற்று மாசு நேற்று 399 ஏ.கியூ.ஐ. ஆக இருந்தது. இந்த காற்றை சுவாசிக்கும் நபர் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் ஆகும் என்று மருத்துவர்கள் … Read more

நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தேசிய மகளிர் ஆணையம்

பாட்னா பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி முதல்வர் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.  சாதி வாரிக் கணக்கெடுப்பு பீகார் மாநில அரசு நடத்தியுள்ளது. நேற்று இது தொடர்பான விரிவான அறிக்கை அந்த மாநில சட்டசபையில்  முன்வைக்கப்பட்டது.  அதன் மீது விவாதம் பீகார் சட்டசபையில் நடந்துள்ளது. விவாதத்தில் முதல்வர் நிதிஷ்குமார், ‘மாநிலத்தில் இதர பிற்பட்டோருக்கான (ஓ.பி.சி.) இட ஒதுக்கீடு 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கான இட … Read more

Sembai Sangeet Utsavam at Guruvayur Krishna Temple from today | குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இன்று முதல் செம்பை சங்கீத உற்சவம்

பாலக்காடு:கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் நேற்று நடக்கவிருந்த செம்பை சங்கீத உற்சவ துவக்க விழா ரத்து செய்யப்பட்டது. இன்று முதல், சங்கீத உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஏகாதசி உற்சவம், வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.உற்சவத்தை முன்னிட்டு, 15 நாட்கள் நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தின் துவக்க விழா நேற்று நடக்க இருந்தது. இதற்காக, பாலக்காடு, செம்பையில் … Read more

இயக்குனர் அற்புதன் சாலை விபத்தில் மரணம்

ராகவா லாரன்சை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் அற்புதன். நடன இயக்குனராக இருந்த லாரன்ஸ் அறிமுகமான 'அற்புதம்' படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு ஷாம் நடித்த 'மனதோடு மழைக்காலம்' படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு உதய்கிரண் நடித்த 'செப்பவே சிறுகாளி' என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். விருகம்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அற்புதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது … Read more