தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம் பிரபு படம்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் சினிமாவில் விக்ரம் பிரபு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.