Curfew normalcy affected in Manipur | மணிப்பூரில் ஊரடங்கு இயல்பு நிலை பாதிப்பு

இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்பு படையினரின் ஆயுதக்கிடங்கை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதை அடுத்து, பதற்றம் நிலவுகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மே மாதம் கூகி – மெய்டி பிரிவினரிடையே, இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி … Read more

நேரடி தெலுங்கு படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜா

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி மற்றும் நடிகர் ஆனந்த் தேவரகொண்டா. இவர் நடித்து வெளிவந்த 'பேபி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நேரடி தெலுங்கு படத்தில் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கின்றார். 'டூயட்' என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் மிதுன் வரதராஜ கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தலைப்பு போஸ்டர் உடன் இந்த படத்தை அறிவித்துள்ளனர். … Read more

Ayalan: அடுத்தப்படமும் சிவகார்த்திகேயனுடன்தான்.. மாஸ் ஸ்கிரிப்ட்டுடன் காத்திருக்கும் அயலான் இயக்குநர்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குநர்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்; அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் கும்பாபிஷேக நிகழ்வு … Read more

வரும் 4 ஆம் தேதி தஞ்சையில் நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் அதிமுக நடைபெற இருந்தது. அந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதிமுக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி, 4.11.2023 அன்று … Read more

Nirmala Sitharaman participates in NAM 200 program to lay foundation stone for 10,000 additional houses for Sri Lankan plantation workers | இலங்கை தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதலாக 10,000 வீடுகள் கட்ட அடிக்கல் நாம் 200 நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

கொழும்பு, ”இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூடுதலாக, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது,” என, ‘நாம் 200’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நம் அண்டை நாடான இலங்கைக்கு, மலையக தமிழர்கள் வந்ததன், 200 ஆண்டு வரலாற்றை போற்றும் விதமாக, ‘நாம் 200, ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் … Read more

சென்சார் சான்று உடன் ரிலீஸ் தேதியை அறிவித்த ‛ஜப்பான்' படக்குழு

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 25வது படமாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரிம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் இருந்தனர். தற்போது இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் … Read more

Suriya: ”சூர்யாவுக்காக ஸ்க்ரிப்ட் ரெடி… தமிழில் தரமான சம்பவம்..” அயலான் இயக்குநரின் செம்ம அப்டேட்

சென்னை: இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணி இணையவுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்காக சூப்பரான ஸ்க்ரிப்ட் ஒன்று ரெடியாக இருப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அவள் விருதுகள் நேரலை: “கல்வியும், விவசாயமும் நம்மை உயர்த்தும்…" – நடிகர் கருணாஸ்

உழைப்பால் வலுவேறிய சாகச மங்கை… `சாகச மங்கை’ சங்கீதா பெண்கள் மிக அரிதாகக் காணப்படும் `பாடி பில்டிங்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சங்கீதா. திருப்பத்தூர் மாவட்டம், மேட்டுப் பாளையம் கிராமத்தில் தனது குடிசை வீட்டில், தன் பதின் பருவ பிள்ளைகள் தினேஷ்குமார், நந்தினி மற்றும் வறுமையுடன் வாழ்கிறார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவர் இறந்துவிட, தோல் ஃபேக்டரி வேலை, மேஸ்திரி வேலை, வீட்டு வேலை, கழிவறை சுத்தம் செய்யும் வேலை எனக் கிடைக்கும் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். … Read more

'5 மாநிலத் தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவப் போகிறது' – முதல்வர் ஸ்டாலின் கணிப்பு

சென்னை: “விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது. 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்திதான், நமக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறன்றனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை திருவான்மியூரில் ,பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமணவிழா தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இத்திருமண விழாவில் … Read more